― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?மூன்று நிலாக்கள் ஒரே நாளில்!

மூன்று நிலாக்கள் ஒரே நாளில்!

- Advertisement -

மூன்று நிலாக்கள் ஒரே நாளில் காண வாருங்கள்:

ஜனவரி 31 ஆம் தேதி நிலா நமக்கு ஒரே நேரத்தில் மூன்று விருந்து வைக்க உள்ளது.. அதாவது super moon , blue moon, blood moon இந்த மூன்று அதிசய நிகழ்வுகளும் ஒரே நேரத்தில் நடக்க உள்ளன. கூடவே முழு சந்திர கிரகணம் எனும் நிகழ்வையும் சேர்த்து கொள்ள மறக்காதீர்கள்.
இந்த கலர் கலர் நிலாகள் …இவைகள் என்ன என்பதை பார்ப்போமா ??
? Super moon :
நிலா நம்மை நீள் வட்ட பாதையில் சுற்றுவதை நாம் அறிவோம். அப்படி சுற்றும் போது எப்போவாவது மிக மிக அருகில் வந்து போகும். அப்படி மிக அருகில் வரும் நிகழ்வுக்கு பெயர் சூப்பர் மூன். அன்றைக்கு நிலா வழக்கத்தை விட மிக பெரிதாக தெரியும் வழக்கமான வடிவத்தை விட 14 சதம் அதிகம் பெரிதாக 30 சதம் அதிக வெளிச்சமாக தெரியும்.
? blue moon :
இது நீல நிறத்தில் எல்லாம் தெரியாது சும்மா பெயர் தான் ப்ளூ மூன்.
ஒரே மாதத்தில் இரண்டாவது முழு நிலவு தோன்றினால் அந்த நிகழ்வு தான் blue moon.
? Blood moon :
முழு சந்திர கிரகணத்தின் நடக்கும் ஒரு நிகழ்வு படி சூரிய கதிர்களில் உள்ள நீல நிறங்கள் வழியிலேயே சிதரடிக்க பட சிகப்பு நிறத்தை மட்டும் பிரதி பலிக்கும் ரத்த நிலா தான் blood moon
இப்படி பூமிக்கு மிக பக்கத்தில் சூப்பர் மூனாக வந்து …கூடவே ப்ளூ மூணாகவும் வந்து… ரத்த நிறத்திலும் வரும் jan 31 ஆம் தேதி தெரிய போகும் முழு சந்திர கிரகணம் ஒரு மிக மிக அறிய நிகழ்வு…
கடந்த 150 ஆண்டுகள் கழித்து வரும் ஒரு அபூர்வ நிகழ்வு…
வெறும் கண்ணால் பார்க்க தடை இல்லை என்பதால் உங்கள் பகுதியில் தெரியும் பட்சத்தில் பார்த்து மகிழுங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version