
பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.
குழந்தைகள் எப்போதுமே மகிழ்ச்சியை அளிப்பவர்கள். அவர்கள் செய்யும் வேடிக்கையான விஷயங்கள் நம்மை சிரிக்க வைக்கின்றன.
குழந்தைகள் செய்யும் வேடிக்கை, குறும்பு, விஷமம், அவர்களது கோவம், குழந்தைத்தனம், பயம் என அனைத்திலுமே ஒரு வித நகைச்சுவை கலந்திருக்கும். அவர்கள் எப்போது என்ன செய்வார்கள் என்று கூட நம்மால் யோசிக்க முடியாது.
யாராவது அவர்களை திட்டினால், அவர்களுக்கு பதிலளிக்கவும் அவர்கள் தயங்குவதில்லை. சமூக வலைதளங்களில் அப்படி ஒரு குழந்தையின் வீடியோ வைரலாகி வருகிறது.
அதில் ஒரு குழந்தை ஒரு மைதானத்தில் விளையாடிக்கொண்டு இருக்கிறது. அப்போது அங்கு அக்குழந்தை ஒரு நாயை பார்க்கிறது. நாயும் குழந்தையை பார்த்து குரைக்கத் தொடங்குகிறது. ஆனால், அதற்கு பிறகு நடக்கும் விஷயம் நம் கற்பனைக்கு அப்பாற்பட்டு இருக்கிறது.
வைரலான இந்த வீடியோவில் குழந்தையை பார்த்து நாய் குரைப்பதை காண முடிகின்றது. அது குழந்தைக்கு பிடிக்கவில்லை. நாய்க்கு பாடம் கற்பிக்க, குழந்தை நாயை நோக்கி நடக்கத் துவங்குகிறது.
ஆனால், அப்போது வேடிக்கையான ஒரு விஷயம் நடக்கிறது. குழந்தை வருவதை பார்த்த நாய் அதை நோக்கி ஓடி வருகிறது. திடீரென்று, நாயின் பயங்கரமான பாணியைப் பார்த்த குழந்தை, அரண்டு போய் அழுதபடியே திரும்பி ஓடத் தொடங்குகிறது. குழந்தை மற்றும் நாயின் இந்த அழகான வீடியோ வெளிவந்ததிலிருந்து இணையத்தைத் தெறிக்க வைக்கிறது.
இந்த காணொளியில் குழந்தையையும் நாயையும் பார்ப்பவர்களால் கண்டிப்பாக சிரிப்பை நிறுத்த முடியாது. இந்த வீடியோ vijaynathnishad708 என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
காணொளியைப் பார்த்து அனைவரும் வாய் விட்டு சிரித்து வருகின்றனர். இதுவரை இந்த வீடியோ லட்சக்கணக்கான வியூஸ்களையும் லைக்குகளையும் பெற்றுள்ளது.