இத்தாலிய நாட்டில் உள்ள ஒரு சிலையின் மேலிருந்து புல்தரையை நோக்கி வெள்ளை மயில் பறந்து வரக்கூடிய வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இத்தாலிய நாட்டின் ஸ்ட்ரெசாவிற்கு அருகேயுள்ள ஐசோலா பெல்லாவின் பூங்கா தோட்டத்தில் சிலை ஒன்று இருக்கிறது.
இந்த சிலையின் உச்சியிலிருந்து ஒரு வெள்ளை மயில் பறந்து வந்து தரை இறங்குவது வீடியோவில் பதிவாகி இருக்கிறது.
அந்த வெள்ளை நிற மயில் உலா வருவதை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர். இந்த வகையான வெள்ளை மயில்கள் லூசிசம் மரபணு மாற்றம் பெற்ற நீல மயில்களின் துணை இனமாகும்.
பிறக்கும் போதே மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்த மயில்கள் வரும்போது வெள்ளை நிறமாக மாறுகிறது குறிப்பிடத்தக்கது.
White peacock in flight..🦚😍 pic.twitter.com/CnBNbSoprO
— 𝕐o̴g̴ (@Yoda4ever) April 29, 2022