மாமல்லபுரம் பூஞ்சேரியில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ள நிலையில் மாமல்லபுரம் பகுதியில் இன்று முதல் டிரோன் கேமராக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-தேதி முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. உலகம் முழுவதும் இருந்து 2500 விளையாட்டு வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் மாமல்லபுரம் வர உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் மாமல்லபுரம் பூஞ்சேரி பகுதியில் இன்று முதல் டிரோன் கேமராக்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அப்பகுதி முழுவதும் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது,
மாமல்லபுரம் பூஞ்சேரியில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக மாமல்லபுரம் பகுதியில் ஜூலை 12இன்று முதல் டிரோன் கேமராக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.