― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?இரண்டு உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள்! இரு அமைப்புகளாகப் பிரிந்து நடத்துவது ஏன்..?

இரண்டு உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள்! இரு அமைப்புகளாகப் பிரிந்து நடத்துவது ஏன்..?

- Advertisement -

இரண்டு உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள் இரண்டு அமைப்புகளாகப் பிரிந்து நடத்தப் படுவது ஏன் என்றும், ஒற்றுமையினை வலியுறுத்தியும் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்ற இலங்கைக் கிளை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் வெளியான அறிக்கையின் முழு விவரம்…

நாளை செப்டம்பர் 1, தனிநாயக அடிகளாரின் நினைவு தினம். இந்நாளில் அவரது சிந்தனையிலும் விடாமுயற்சியினாலும் உருவான அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்தினை (International Association of Tamil Research-IATR), அதன் மேன்மை கெடாமல், சிதையா நிலையில் அடுத்துவரும் தலைமுறையினருக்கு கிடைக்கச் செய்வது எமது கடமையாகும்.

பதினோராவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, இரு அணிகளால் சார்ஜா, சிங்கப்பூர் ஆகிய இரண்டு நாடுகளில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்ற (IATR) இலங்கைக்கிளையின் அறிக்கை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

***

பதினோராவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, இரு அணிகளால் சார்ஜா, சிங்கப்பூர் ஆகிய இரண்டு நாடுகளில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளமை தொடர்பில் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்ற (LATR) இலங்கைக்கிளையின் அறிக்கை

அண்மைக்கால வரலாற்றில் தமிழ்மொழி தொடர்பில் ஏற்பட்ட மேன்மையான சிந்தனைத்திரள் செயலணி அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றமே உலகளாவிய நிலையில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களும், தமிழாய்வுகளை மேற்கொண்டிருக்கும் அறிஞர்களும் ஒரே குடையின்கீழ் இணைந்து நேரடியான கருத்துப் பரிமாற்றம் செய்யத்தக்க மாக அனைத்துவகத் தமிழாராய்ச்சி மன்றத்தினை தனிநாயக அடிகளார். தனது பத்தாண்டுகளுக்கு மேலான தொடர் முயற்சியின் பெறுபேறாகத் தோற்றுவித்தார்.

1952 ஆம்ஆண்டில் அடிகளாரினால் தொடங்கப்பட்டு வெளிவந்துகொண்டிருந்த தமிழ் கல்ச்சர் (Tamil Culture) என்ற ஆங்கிலமொழிமூல முத்திங்கள் ஆய்விதழ் மூலம் அவருக்குக் கிடைத்த உலகளாவிய ஆய்வாளர்களின் மேலான தொடர்பும், உயரிய நட்பும், சிந்தனைப் பரிமாற்றமும் 1984ஆம் ஆண்டில் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்தைத் தோற்றுவிப்பதற்கு வாய்ப்பான சூழலை ஏற்படுத்தின.

உலக மொழிகள் பலவற்றை அறிந்திருந்த தனிநாயக அடிகளார் தமது உலகளாவிய பயணங்களின்போது மேற்கொண்ட சொற்பொழிவுகளும். மேற்படி ஆய்விதழும் தமிழ்மொழியை உலகறியச் செய்தன, தமிழின் தொல்சீர் இலக்கியங்களின் பெருமையும் தமிழ்ப் பண்பாடும் உலகறிந்த விடயங்களாயின. அடிகளாரின் தூண்டுதலும் ஆதரவும் காரணமாக மலாய், சீனம், ஸ்டாளிடம் முதலான மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டது.

உலக தத்துவ நூல்களையும் திருக்குறளையும் ஒப்பிட்டு ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதப்படுவதற்கும் வழிகாட்டியாக அடிகளாரே விளங்கினார். முதன்முதலில் தமிழில் அச்சான நூலின் பிரதியை போர்ச்சுக்கல் நாட்டு ஆவணக் காப்பகத்திலிருந்து மீட்டுத் தந்தார் தமிழின் முதலாவது அகராதியாக அமைந்த 1679ஆம் ஆண்டில் வெளியான புரேயென்சாவின் தமிழ் போர்ச்சுக்கேசிய அகராதியினை 1966ஆம் ஆண்டில் மீள்பதிப்புச் செய்தார், மேலைநாட்டு நூலகங்களில் காணப்பட்ட தமிழ் ஓலைச்சுவடிகள், அரிய நூல்கள் தொடர்பான பட்டியல்களை வெளியிட்டார். இவ்வாறு தமிழின் உலகளாவிய மேம்பாட்டிற்கு தனியொருவராக நின்று அடிகளார் ஆற்றிய பணிகளின் நீட்சியாகவே அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம் அமைந்தது.

திருக்குறள், உலகம், கோபுரம் ஆகியவற்றைச் சுற்றிக் கணியன் பூங்குன்றனாரின் “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்ற தொடரின் ஆங்கில வடிவமான “Every Country is My Courtry : Every Man is My Kirsman’ என்ற மகுடவாசகத்தைக் கொண்டதாக அடிகளாரால் வடிவமைக்கப்பட்ட அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் இலச்சினையும் அவரது உலகநிலைப்பட்ட தமிழ்ப் பார்வையின் வெளிப்பாடாகவே அமைந்தது.

1983ஆம் ஆண்டில் வெளியான தமிழாரம் நூலில் 42வது பக்கத்தில் செக் நாட்டு அறிஞரான கமில் சுவலபில் அவர்கள் கூறியுள்ளதை இங்கு சுட்டிக்காட்டுதல் பொருத்தமானது.

“அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் நோக்குநிலை மற்றும் அதன் இயங்கு தன்மை பற்றி நாங்கள் நடத்திய உரையாடல்களை என்னால் நன்றாக நினைவிற்கொள்ளமுடிகிறது : உண்மையில் மன்றம் நிறுவப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே தொடக்க நிலை உரையாடல்களின்போதே மன்றத்திற்கான வழிகாட்டுக் கொள்கைகள் மூன்றினை ஒருமனதாக வடிவமைத்து ஏற்றுக்கொண்டோம்.

  1. உண்மையிலேயே அனைத்துலக ரீதியானதாக இருத்தல். 2. உண்மையான அறிவார்ந்த அடித்தளத்தினைக் கொண்டிருத்தல், 3. நேர்மையான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளல்.

ஏனைய விடயங்களில் நமக்குள் சில சிறிய வேறுபாடுகள் இருந்திருக்கலாம் என்றாலும், இந்த மூன்று அடிப்படைக் கொள்கைகளும் கேள்விக்கு உட்படுத்தப்படவில்லை. மன்றத்தின் முதல் அமர்வுகள், செயல்பாடுகளில் பங்கேற்ற ஜீன் ஃபிலியோசா. மு. வரதராசன், எஃப் பி. ஜே. குய்ப்பர், ஆர். இ. ஆஷர் முதலானவர்களாலும் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டன. மன்றத்தின் செயற்பாடுகளுக்குப் பின்னால் கண்ணுக்குத் தெரியாத உண்மையான தமிழ்மனம் ஒன்று அனைவரிடமும் குடிகொண்டிருந்தது எனலாம். உண்மையில், மன்றத்தின் ஆன்மீகத் தந்தை தனிநாயகமே. கண்ணியமும் தண்ணளியும் நேர்மையும் பொருந்திய தமிழ்த்தேசிய உணர்வோடு, அவரது தெளிவான தீர்மானங்களும் பரந்த உலகநோக்கும் இணைந்து இதனைச் சாத்தியப்படுத்தின”

வெளிப்படைத் தன்மையும் அறிவாற்றலும் மிக்க கட்டமைப்பாக அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்தினை எக்காலத்திலும் வழிநடாத்திச் செல்லத்தக்க வகையில் அதன் யாப்பும், தொடக்கத்திலேயே அறிஞர்களால் வரையப்பட்டிருந்தது. 1962ஆம் ஆண்டில் அறிஞர் கமில் சுவலபில் அவர்கள் தொகுத்த நூலின் பின்னிணைப்பில் யாப்பினைக் காணலாம்.)

முதலாவது தமிழாராய்ச்சி மாநாடு மலேசியாவில் 1908ஆம் ஆண்டில் நடைபெறுவதற்கு முன்னரே. 1966ஆம் ஆண்டில் தனிநாயக அடிகளார் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் இலங்கைக் கிளையினை நிறுவியிருந்தார். தமிழ் கலச்சர் ஆய்விதழிற்குப் பங்களிப்புச் செய்துகொண்டிருந்த இலங்கை ஆய்வறிஞர்களான எச். டபிள்யூ. தம்பையா, பண்டிதர் க.பொ. இரத்தினம், ஏ. ஜே. வில்சன், சி. பாலசிங்கம், எம். எம். உவைஸ், க. வித்தியாளந்தன், ஆ. சதாசிவம் போன்றோரும் புதியவர்கள் சிலரும் இலங்கைக் கிளையின் உறுப்பினர்களாக இணைந்து செயற்பட்டனர்.

தமிழாராய்ச்சி மாநாடுகள் வெளிநாடுகளில் நடைபெறும்போது அந்த நாடுகளிலுள்ள மாநாட்டு ஏற்பாட்டுக்குழுவினருடன் தொடர்புகளைப்பேணி, இலங்கை ஆய்வாளர்களின் ஆய்வுச் சுருக்கங்கள், ஆய்வுக் கட்டுரைகளைப் பெற்று அனுப்புதல், மாநாட்டிற்கு இலங்கைப் பேராளர்களைக் குழுவாக அழைத்துச் செல்லுதல் முதலானவற்றை வி. எஸ். துரைராஜா அவர்கள் இலங்கைக்கிளையின் செயலாளராகப் பணியாற்றிய காலங்களில் செவ்வனே செய்துள்ளார். இவற்றுக்கு அப்பால் இலங்கைக்கிளை காத்திரமான வேறு செயற்பாடுகளையும் தமிழ் ஆராய்ச்சித் தளத்தில் மேற்கொண்டுள்ளது. அவையாவன;

இரண்டாவது தமிழாராய்ச்சி மாநாடு சென்னையில் 1908ஆம் ஆண்டில் நடைபெற்றபோது அதில் கலந்துகொள்ளவுள்ள ஆய்வளர்களின் பயணச் செலவுகளுக்காக 1967ஆம் ஆண்டின் இறுதியில் யாழ்நகரில் ஒரு நடன நிகழ்ச்சி நாடாத்தி, நிதிதிரட்டி ஏற்பாடு செய்தமை

1971ஆம் ஆண்டில் ஈழத்துத் தற்காலத் தமிழ்நூற் காட்சி என்ற தலைப்பில் இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னர் வெளியான தமிழ் நூல்களைக் காட்சிப்படுத்தியமை: எஸ். எம். கமால்டீன், க. கைலாசபதி ஆகியோரின் துணையுடன் தமிழியல் ஆராய்ச்சிக்குத் துணைசெய்யக்கூடிய தெரிவுசெய்யப்பட்ட தமிழியல் நூற்றொகை வெளியிட்டமை

1284 தை மாதம் யாழ்ப்பாணத்தில் நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினைச் சிறப்புடன் நடாத்தியமை நினைவு மலர். யாரெவர் (who is who) தொகுப்பு நூல், ஆய்வுத் தொகுதிகள் ஆகியவற்றை வெளியிட்டமை: இலங்கைவாழ் தமிழ் மக்களிடமிருந்து இம்மாநாட்டிற்கான நிதியைப் பெற்றுக்கொண்டமை, மற்றைய தமிழாராய்ச்சி மாநாடுகளில் காணப்படாத சிறப்பாகும். எந்தவொரு அரசாங்கத்தினதும் நிதியாதரவு இல்லாது நாடத்தப்பட்ட ஒரே மாநாடு யாழ்ப்பாண மாநாடேயாகும்.

1906ஆம் ஆண்டில் மட்டக்களப்பு நகரில் இலங்கைக் கிளையின் முதலாவது பிராந்திய மாநாடு நடாத்தியமை, நினைவு மலர் மற்றும் யாரெவர் வெளியிட்டமை, மூன்று நாட்கள் நடைபெற்ற இப்பிராந்திய மாநாட்டில் 44 ஆய்வுக்

1983ஆம் ஆண்டில் முள்ளியவளையில் வன்னிப் பிராந்திய மகாநாடு எனும் தலைப்பில் இலங்கையின் இரண்டாவது பிராந்திய மாநாடு நடாத்தியமை. இதில் இலங்கை ஆய்வாளர்களின் 44 கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு வாசிக்கப்பட்டுள்ளன. நினைவு மலரும், யாரெவர் தொகுப்பும் இலங்கைக்கிளையினால் வெளியிடப்பட்டன.

ஆம்ஆண்டில் கொழும்பு நகரில் இலங்கையில் தமிழ் வழிக்கல்வி எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடாத்தியமை. இக் கருத்தரங்கில் பேராசிரியர் எம். ஏ. நுஃமான், பேராசிரியர் சோ. சந்திரசேகரம் உள்ளிட்ட பன்னிரு அறிஞர்கள் தங்கள் ஆய்வுரைகளை வழங்கியுள்ளனர்.

2015ஆம் ஆண்டில் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் என்ற தலைப்பில் நூல் வெளியிட்டமை இந்நூல் 2019 ஆண்டில் இரண்டாவது பதிப்பையும் கண்டுள்ளது.

பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்கள் இலங்கைக்கிளையின் தலைமைப் பொறுப்பிலிருந்த காலம், அதிக நெருக்கடிகளையும் இடர்களையும் எதிர்கொண்ட காலமாக அமைந்தபோதிலும், எதையும் இறுதிவரை போராடி வெற்றி பெறுகின்ற அவரது மனப்பாங்கும் துணிவும் காரணமாக இலங்கைக் கிளை ஆக்கபூர்வமானமுறையில் இயங்கியது.

1995ஆம் ஆண்டில் தஞ்சாவூரில் நடைபெற்ற எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டு அரங்கிலிருந்து இலங்கைப் பேராளர்கள் வலுக்கட்டாயமாகக் காவல்துறையினரால் வெளியேற்றப்பட்டமை அரசியல் காரணங்களுக்கானதென மனவருத்தத்துடன் கடந்து செல்லலாம். ஆனால் மாநாட்டிற்காக இலங்கைப் பேராளர்களிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட 32 ஆய்வுக் கட்டுரைகளும் அரங்கில் (பதிலிகளால்) வாசிக்கப்படாதமையும் ஆய்வுத் தொகுதிகளில் இணைக்கப்படாமையும் இலங்கைப் பேராளர்கள் சந்தித்த பெரு அநீதியாகும். ஏனெனில் முதலாவது மாநாடு மலேசியாவில் நடைபெற்றபோது தமிழ்நாட்டிலிருந்து நா. வானமாமலை அவர்கள் கலந்துகொள்ளவில்லை,

ஆனால் அவரால் அனுப்பப்பட்டிருந்த நேர்வுக் குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த இரண்டு கட்டுரைகளும் ஆய்வுத் தொகுதியில் இடம்பெற்றுள்ளன. இவ்வாறே 1964ஆம் ஆண்டில் சென்னை மாநாட்டின்போதும், 1961ஆம் ஆண்டில் மதுரை மாநாட்டின்போதும் சில ஆய்வாளர்கள் தவிர்க்கமுடியாத காரணங்களால் மாநாட்டில் நேரில் கலந்துகொள்ளவில்லை. ஆனால் அவர்களுடைய கட்டுரைகள் அரங்கில் வேறு ஆய்வாளர்களால் (பதிலிகளால் வாசிக்கப்பட்டன. ஆய்வாளர் அமர்வில் கலந்து கொள்ளவில்லை யென்பதால் விவாதத்திற்கு உட்படுத்தப்படவில்லை என்ற பதிப்பாசிரியர் குறிப்புடன் அவை ஆய்வுத் தொகுதிகளிலும் இடம்பெற்றுள்ளன,

1968, 1981 நிகழ்வுகளை முன்மாதிரியாகக்கொண்டு எட்டாவது மாநாட்டிலும் இலங்கை ஆய்வாளர்களின் ஆய்வுக் கட்டுரைகளை இணைத்திருக்கவேண்டிய இயல்பான கடமையை தமிழக ஏற்பாட்டுக்குழுவினர் அல்லது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்தினர் தவறவிட்டனர். இது எமக்கு வருத்தத்தைத் தரும் நிகழ்வுதான், ஆனாலும் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையிலான எந்தவொரு எதிர்வினையிலும் நாம் இறங்கவில்லை, “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்பதற்கமைய அமைதியாக நகர்ந்துவிட்டோம்.

ஆனால் மன்றத்தின் இன்றைய செயற்பாடுகள் அதன் உலகளாவிய கூட்டுறவிற்கும். கௌரவத்திற்கும் இழுக்கினை ஏற்படுத்தும் வகையில் அமைகின்றமை வருந்தத்தக்கது. மன்றத்திற்குரிய யாப்பின் அடிப்படையில் உலகளாவிய நிலையில் கண்ணியமான அறிஞர்களின் கூட்டுறவோடு முன்பு மன்றம் தன் பெயருக்கு ஏற்றவகையில் இயங்கியது. பிறப்பால் தமிழரல்லாத ஆய்வாளர்கள் தலைமைப் பொறுப்பேற்று அறிவுபூர்வமான வகையிலே மாநாடுகளை நடாத்தினார்கள்.

காலகதியில் தமிழர்கள் என்ற எல்லைக்குள் சுருங்கி உள்ளூர்ச் செல்வாக்குகளால் மன்றம் தன் உலகளாவிய நோக்கிலிருந்தும் வியாபகத்திலிருந்தும் விடுபடநேர்ந்தது. அந்தப் போக்கு இன்று மிகமோசமான நிலைக்கு மன்றத்தினைக் கொண்டுவந்து சேர்த்துள்ளது. அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம் என்பது தற்போது இருகூறுகளாகப் பிளவுபட்டு. அடுத்த ஆண்டில் சார்ஜா, சிங்கப்பூர் என்று இரு இடங்களில் பதினோராவது தமிழாராய்ச்சி மாநாடு நடாத்துவதற்கு அழைப்பு விடுத்துள்ளமை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாத விடயமாகும்.

கடந்த காலத்தில் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம் ஈட்டிய நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில், தனிநாயக அடிகளார் உள்ளிட்ட சான்றோர்கள் ஏற்படுத்திய அடிப்படையான மூன்று வழிகாட்டுக் கொள்கைகளில் இருந்தும் மிகவும் விலகிச் செல்வது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் எதிர்காலத்திற்கு மிகவும் பாதகமானது என்பதை இரு அணிகளும் உணர்ந்துகொண்டு நேர்மையும், அறிவாற்றலும் மிக்க உலகளாவிய ஆளுமைகளின் வழிகாட்டலில் மன்றத்தை ஒருமுகமாக இயங்கச் செய்யவேண்டும் என்று வினயமாகக் கேட்டுக்கொள்கிறோம்.

அனைத்துலகத் தமிழாரய்ச்சி மன்றம் என்ற தேரினை இழுத்துச் செல்வதற்கு வடம்பிடித்துள்ள இரு அணிகளும் ஆளுக்கொரு திசைக்கு இழுப்பதற்குப் போதிய பலத்தினைத் தாம் கொண்டிருப்பதாக நம்பலாம். ஆனால் ஆளுக்கொரு திசையில் இழுப்பதால் தேர் ஓடாது என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும். அத்தோடு தேரோட்டத்தின் வெற்றி வடம் பிடித்து இழுப்போரின் பலத்தில் இல்லை. தேரோட்டத்தை நெறிபடுத்துவது சறுக்குக்கட்டையை வைத்திருக்கும் பலமும் விவேகமும் பொருந்தியோரின் கைகளிலிலேதான் தங்கியுள்ளது என்பதையும் உணர்ந்துகொண்டு அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றவேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.

கடந்த காலத்தில் இலங்கையிலிருந்து உலகத் தமிழ் மாநாடுகளில் பங்குபற்றி ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்திருந்த ஆய்வாளர்கள் பலரும் இன்று உலகெங்கும் பரந்து வாழ்கிறார்கள். அவர்கள் அனைவரையும் கடந்த இருவார காலத்தில் தொடர்புகொண்டு நிலைமையை எடுத்துச் சொல்லியுள்ளோம். அதேபோன்று இலங்கையிலுள்ள தற்கால இளம் ஆய்வாளர்களுக்கும் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையினை விளக்கி வருகின்றோம்.

அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம் என்ற அமைப்பானது ஒருமுகப்பட்ட நிலையில் உலகம் உள்ளளவும் பிளவுகள் அற்ற அமைப்பாகத் தொடர்ந்தும் செயலாற்றவேண்டும் என்பதற்காகவே இலங்கைக் கிளையானது இந்த அறிக்கையினை வெளியிடுகின்றது.

“யாதும் ஊரே, யாவரும் கேளிர்”

க. இரகுபரன் & சு. குமரன் இணைச் செயலாளர்கள் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்ற இலங்கைக்கினை

சி. பத்மநாதன் தலைவர் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்ற இலங்கைக்கிளை

***

ALSO READ: IATR – இரு தளங்கள்; இரு தலைவர்கள்; ஒரே பெயரில் இரு உலகத் தமிழ் மாநாடுகள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version