

ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் நகரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் மாணவர்களுடன் அமர்ந்து ஆசிரியர் பாடம் நடத்துவதை கவனிக்கும் குரங்கு குறித்து வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாகி உள்ளது.
மாணவர்கள் நிறைந்த வகுப்பறைக்குள் நுழையும் அந்த குரங்கு பின்வரிசையில் சாதாரணமாக அமர்க்கிறது. அதை பொருட்படுத்தாமல் அந்த வகுப்பு ஆசிரியர் பாடங்களை தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்பது வீடியோவில் இடம் பெற்றுள்ளது.
அரசுப் பள்ளியில் மாணவர்களுடன் காட்டு லங்கூர் பாடம் படிக்கிறார் என்ற தலைப்பில் அந்த வீடியோ இடம் பெற்றுள்ளது. ஒரு வகுப்பில் முன் வரிசையில் குரங்கு அமர்ந்திருப்பது குறித்த புகைப்படமும் இணையதளத்தில் வெளியாகியது. பள்ளியில் இணைந்த புதிய மாணவர் என்று இது குறித்து டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டது. முன்னதாக சில குரங்குகள் இணைந்து மொபைல் போனைப் பயன்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி 18 லட்சம் பாரவையாளர்களையும் ஆயிரக்கணக்கான விருப்பங்களை பெற்றுள்ளது. குரங்குகளும் ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாகி விட்டதாக சிலர் கருத்து தெரிவித்திருந்தனர்.