
குஜராத்தில் மூன்றாவது முறையாக வந்தே பாரத் ரயில், மாடுகள் மீது மோதியதில் ரயிலின் முன்பகுதி சேதமடைந்தது.
மும்பையில் இருந்து குஜராத் காந்தி நகர் சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயில், குஜராத்தில் அதுல் ரயில் நிலையம் அருகே இன்று காலை 8.15 மணியளவில் வந்தபோது மாடுகள் மீது மோதியது.
இதில் ரயிலின் முன்பகுதி சேதமடைந்ததால் 15 நிமிட பயணம் தடைபட்டது. உடனடியாக அதிகாரிகள் வந்து சேதமடைந்த பகுதியை சரிசெய்தனர். இதன்பின்னர் மீண்டும் ரயில் இயங்கியது.
இந்த விபத்தில் மாடு ஒன்றும் காயமடைந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாகவும் இரண்டு முறை வந்தே பாரத் ரயில்கள் மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. இனி நெட்டிசன்கள் இத வச்சு ஒரு மாசத்துக்கு காமடி மீம்ஸ் பதிவுகள் இட்டு கொண்டாடலாம்.