
தீபாவளி பண்டிகையையொட்டி, டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் இருநாட்களில் 464.21 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது.ஆவினில் ரூ.116 கோடிக்கு இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 40% அதிகம் ஆகும்.
தீபாவளியை முன்னிட்டு ஆவினில் புதிதாக ஒன்பது வகையான சிறப்பு இனிப்பு வகைகள் அறிமுகம் செய்யப்பட்டன. இதன்படி ஏற்கெனவே உள்ள பால், இனிப்பு பொருட்களுடன் இந்த ஆண்டு 9 புதிய இனிப்பு வகைகள் புதிதாக தீபாவளியை முன்னிட்டு அறிமுகம் செய்யப்பட்டன. மேலும், இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.250 கோடி வரை இனிப்புகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
எனினும், தீபாவளி பண்டிகையையொட்டி ஆவினில் ரூ.116 கோடிக்கு இனிப்புகள் விற்பனையாகி உள்ளது. ஆனால், இது கடந்த ஆண்டை விட 40% அதிகம் ஆகும். கடந்த ஆண்டு தீபாவளியின்போது ரூ.85 கோடிக்கு இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டது நினைவுகூரத்தக்கது.

தமிழகம் முழுவதும் தீபாவளி க்கு இரண்டு தினங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகளில் 464.21 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது.
தமிழக அரசுக்கு நிதி வருவாயை ஈட்டி தருவதில் மிக முக்கிய பங்கு வகிப்பது டாஸ்மாக் கடைகள்தான். அதிலும் முக்கியமாக தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் மட்டும் பல நூறு கோடிகள் வருமானம் கிடைக்கும். ஒவ்வொரு வருடமும் முக்கிய பண்டிகையை முன்னிட்டு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்படும். தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் வழக்கமாக சனிக்கிழமை விடுமுறை நாளன்று சுமார் 150 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெறும். கடந்தாண்டு தீபாவளியை ஒட்டி நவம்பர் 3 மற்றும் 4ம் தேதி 2 நாட்களில் 431.03 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனையானது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையொட்டி தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களாக ரூ.464.21 கோடி மதிப்பில் மது விற்பனை ஆகியுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது
அக் 23-ம் தேதிசென்னை-ரூ. 51.52 கோடி.,திருச்சி – ரூ. 50.66 கோடி,சேலம் ரூ. 52.36 கோடி.,மதுரை ரூ. 55.78 கோடி.,கோவை-ரூ. 48.47 கோடி என மொத்தமாக ரூ. 258.79 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது.
அதேபோல் அக் 22ஆம் தேதிசென்னை-ரூ. 38.64 கோடி,திருச்சி – ரூ. 41.36 கோடி,சேலம் – ரூ. 40.82 கோடி,மதுரை ரூ. 45.26 கோடி,கோவை ரூ. 39.34 கோடி என மொத்தமாக ரூ. 205.42 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது. இரண்டு நாட்களில் அதிகபட்சமாக மதுரையில் மட்டும் 101.4 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மது விற்பனை ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நிலையில் பலரும் காலி பாட்டில்களை பொது இடங்களில், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திலும், வனப்பகுதிகளிலும் வீசிச் செல்கின்றனர். இதனை தவிர்க்க டாஸ்மாக் மதுக்கடைகளில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை சோதனை அடிப்படையில் கோவை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் நவம்பர் 15 முதல் அமல்படுத்த வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வனபாதுகாப்பு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்று விட்டு, பின் காலி பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் போது அத்தொகையை திரும்ப வழங்கலாம் என யோசனை தெரிவித்தது. காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, சிறுமலை, கொல்லிமலை, மேகலமலை, டாப் சிலிப் போன்ற மலைப்பகுதிகளிலும் தேசிய பூங்காக்கள், சரணாலயங்களிலும் அமல்படுத்த உத்தரவிட்டது. இதையடுத்து, கோவை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை நவம்பர் 15 முதல் இரு மாதங்களுக்கு அமல்படுத்தி, அதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜனவரி 24ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
