
இறந்த தந்தைக்காக 2 மாத குழந்தையை கடத்தி நரபலி கொடுக்க முயன்ற பெண்னால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இறந்த தந்தையின் உயிரை எப்படியாவது உயிர்த்தெழ நினைத்து குழந்தையை நரபலி கொடுக்க முடிவெடுத்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட அந்த பெண் நரபலி திட்டத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.
தென்கிழக்கு டெல்லியில் உள்ள கிழக்கு கைலாஷ் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது தந்தையின் உயிரை மீட்டெடுக்க 2 மாத குழந்தையை கடத்தி நரபலி கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தந்தை மீது அதீத பாசம் கொண்ட பெண், இறந்த தந்தையின் உயிரை எப்படியாவது உயிர்த்தெழ நினைத்து குழந்தையை நரபலி கொடுக்க முடிவெடுத்துள்ளார்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரியவந்தை அடுத்து, அந்த பெண் தனது திட்டத்தை நடைமுறைபடுத்துவதற்கு முன்பு 24 மணிநேரத்தில் குழந்தையை பாதுகாப்பாக மீட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட அந்த பெண் நரபலி திட்டத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.