December 9, 2024, 12:42 PM
30.3 C
Chennai

பரபரப்பாகும் சத்யேந்திர ஜெயின் மஸாஜ் வீடியோ..

தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி வகித்து வருகிறார். அவரது அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சத்யேந்திர ஜெயின். இதற்கிடையே, சத்யேந்திர ஜெயினை அமலாக்கத் துறையினர் அதிரடியாக கைது செய்தனர். ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சிறையில் உள்ள டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு ஒருவர் மசாஜ் செய்துவிடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த சிறையில் அமைச்சர் உல்லாச வாழ்க்கை அனுபவிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

வீடியோ தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறுகையில், ” உண்மையிலேயே சத்யேந்திர ஜெயின் முதுகெலும்பு பாதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பாஜகவால் மட்டுமே காயம்பட்டவருக்கு சிகிச்சை அளிக்கும் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு கொடூரமான நகைச்சுவைகளை செய்ய முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சிறையின் சிசிடிவி விடியோ பாஜகவினருக்கு எப்படி கிடைத்தது?

ALSO READ:  இலவச பாஸை ரூ.500க்கு விற்று கல்லா கட்டிய கும்பல்!

இந்த நிலையில் தில்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு சிறையில் மசாஜ் செய்யும் விடியோ வெளியானது தொடர்பான சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை விசாரணை மேற்கொள்ள உள்ளது.ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2017-ஆம் ஆண்டில் சத்யேந்தா் ஜெயினுக்கு எதிராக சிபிஐ எஃப்ஐஆா் பதிவு செய்தது. அதன் அடிப்படையில், பணமோசடி வழக்கில் சத்யேந்தா் ஜெயின் மற்றும் இருவரை அமலாக்க இயக்குநரகம் கைது செய்தது. மேலும், அவருடன் தொடா்புடையதாகக் கூறப்படும் நான்கு நிறுவனங்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் பணமோசடி வழக்கில் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், அவரின் மனைவி உள்ளிட்டோரை பணமோசடி வழக்கில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.தில்லி திகார் சிறைக்கு மாற்றப்பட்ட சத்யேந்தர் ஜெயினுக்கு சிறைக்குள் மசாஜ் செய்யும் விடியோ இணையத்தில் வைரலானது. 

இந்நிலையில் சட்டவிரோதமாக சிறையின் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சத்யேந்தர் ஜெயின் தரப்பில் அமலாக்கத்துறைக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள சத்யேந்தர் ஜெயினின் வழக்குரைஞர் சிறையின் சிசிடிவி காட்சிகள் எப்படி பாஜகவினருக்கு கிடைத்தது? இந்த விவகாரம் தொடர்பான விசாரணை நவம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ:  ஒரு நாள் வெடிக்கிறதால ஒண்ணும் ஆகிடாது; பட்டாசு வெடிங்க, தீபாவளிய சந்தோசமா கொண்டாடுங்க!

 https://twitter.com/i/status/1593825541060108288

author avatar
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.09 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...