
சிவகாசி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் ஐந்தாவது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் ரூபாய் 1 லட்சத்து 10 ஆயிரம் லஞ்சப் பணத்தை யாரிடம் கொடுக்க என்று பணத்துடன் வந்து மேயரிடம் கேள்வி கேட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி மாமன்ற சாதராண கூட்டம் மேயர் திருமதி சங்கீதா மற்றும் துணை மேயர் திருமதி விக்னேஷ் பிரியா ஆகியோர் தலைமையில் நடைபெற்றுது இந்த நிலையில் ஐந்தாவது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் திருமதி இந்திராதேவி வீட்டு தீர்வை பெயர் மற்றும் குடிநீர் குழாய் இணைப்பிற்க்கு பெயர் மாற்றம் செய்வதற்கு தனது வார்டைச் சேர்ந்த பகுதி மக்கள் 11 பேர் கடந்த 7 மாதங்களுக்கு முன்னால் மனு அளித்துள்ளார்கள் என்றும் அதற்கு இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இது குறித்து முறையிட்டால் அதிகாரிகள் ஒரு மனு ஒன்றுக்கு பத்தாயிரம் வீதம் லஞ்சம் கேட்பதாக குற்றச்சாட்டு வைத்தனர் அந்த லஞ்சப் பணத்தை 1 லட்சத்து 10ஆயிரம் நானே கொடுத்து விடுகிறேன் என்று மாமன்ற கூட்டத்திற்கு ஒரு லட்சத்து 10ஆயிரம் பணத்துடன் வந்து இதை யாரிடம் நான் கொடுக்க என்று RI பொறுப்பு கருப்பசாமி மற்றும் மேயரிடம் திமுக மாமன்ற உறுப்பினர் கேட்டதால் மாமன்ற கூட்டம் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டன. மேலும் இது சம்பந்தமாக துறை ரீதியாக எடுக்கப்படும் என்றும் இது போல்
மீண்டும் நடந்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரித்தனர் மேல் அதிகாரி எச்சரித்தனர்.