காசி தமிழ் சங்கமம் 3.0 பிப்ரவரி 14 முதல் நடக்கிறது. காசி, ப்ரயாக்ராஜ், அயோத்தி இந்த 3 ஊர்களுக்கும் இலவசமாக சென்று வரலாம். இந்த லிங்கில் பதிவு செய்யவும்.
காலையில் கரூர் டூ திருச்சி பேருந்தில் சென்று, திருச்சி விமானநிலையம் மூலம் சென்னை விமானநிலையம் சென்று, அங்கு (சென்னை) தலைமை செயலகம், இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் போர் நினைவுத்தூண் ஆகியவற்றை பார்வையிட்டனர்.

இறந்தவரின் தொடையில் பிரேத பரிசோதனையில் உயிருடன் இருந்த வெளியே வந்த பாம்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
அமெரிக்காவில் இறந்தவரின் உடலில் பிரதே பரிசோதனையின் போது அவரது தொடையில் இருந்து பாம்பு ஒன்று வெளியே உயிருடன் வந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. நியூயார்க் அருகே ஜெசிகா லோகன் என்ற 31 வயது பெண் அமெரிக்காவில் மருத்துவமனை ஒன்றில் பிரேத பரிசோதனை செய்யும் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
மருத்துவமனையில் ஜெசிகா 9 ஆண்டுகளாக இந்த பணியில் உள்ளார். இந்நிலையில், தனக்கு நேர்ந்த ஒரு திகில் அனுபவத்தை ஜெசிகா பற்றி பகிர்ந்துள்ளார். ஒரு முறை, இறந்தவரின் உடலில் பிரேத பரிசோதனை செய்துக்கொண்டிருந்தபோது, அந்த உடலில் இருந்து பாம்பு ஒன்று உயிருடன் வெளிவருவதை பார்த்துள்ளார்.
பாம்பு அந்த நபரின் தொடை பகுதியிலிருந்து வெளிவந்ததை பார்த்த ஜெசிகா அலறி அடித்துகொண்டு ஓடினார். பாம்பை பிடித்து அகற்றிய பிறகே மீண்டும் தன் வேலையை தொடர உடலின் அருகில் சென்றதாக அவர் தெரிவித்தார். ஒரு ஓடை அருகில் அந்த உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அப்போது உடலுக்குள் அந்த பாம்பு புகுந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தன் அனுபவம் குறித்து பேசிய ஜெசிகா, “இறந்தவர்களின் உடல்கள் எங்கு எந்த நிலையில் கண்டெடுக்கப்படுகிறது என்பதை பொறுத்து தான் இம்மாதிரியான சம்பவங்கள் நடக்ககூடும் என்றார். குளிரான, உலர்ந்த இடங்களில் உடல்கள் இருந்தால், பூச்சிகள், ஆபத்தான உயிரினங்கள் பிரேதங்களை அது அணுகாது.
ஆனால், சூடான, ஈரப்பதமான இடங்களில் பூச்சிகள் உடலில் அதிகம் இருக்கும்.” என்றார். டாக்டராக வேண்டும் என நினைத்த ஜெசிகாவுக்கு, குடும்பத்தின் பொருளாதார சூழல் காரணமாக படிப்பை பாதியில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பிரேத பரிசோதனையாளராக பணியாற்றிவருகிறார் ஜெசிகா.