To Read it in other Indian languages…

Home அடடே... அப்படியா? தமிழர்‌திருநாள் பொங்கல்-தமிழில் வாழ்த்து தெரிவித்த மோடி..

தமிழர்‌திருநாள் பொங்கல்-தமிழில் வாழ்த்து தெரிவித்த மோடி..

Tamil News large 3218627 - Dhinasari Tamil

தமிழர் திருநாள் தைபொங்கல் பண்டிகைக்கு தமிழில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தது பலரின் கவனத்தை ஈர்த்தது.

தை மாதம் முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கும், இயற்கைக்கும் உழவுக்கும், நன்றி தெரிவிக்கும் விழாவாக தை மாதம் முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் அதிகாலையில் இருந்தே மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து, வண்ண கோலமிட்டு,பொங்கல் பானைக்கு மஞ்சள், குங்குமம் வைத்து, மஞ்சள் கொம்பு செடியை கட்டி, மங்களகரமாக புத்தரிசியில் பொங்கலிட்டு உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

பொங்கல் பொங்கி வரும் போது “பொங்கலோ பொங்கல், பொங்கலோ பொங்கல்” என கூறி மகிழ்ச்சி அடைந்தனர். கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக உற்சாகம் இழந்த இந்த பொங்கல் விழா தற்போது எந்த கட்டுப்பாடும் இல்லாத நிலையில் களை கட்டியுள்ளது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். “உங்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள். இந்த பண்டிகை நம் சமூகத்தில் ஒற்றுமையின் பிணைப்பை மேலும் வலுப்படுத்த நான் பிராத்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி 

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

1 × 4 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version