To Read it in other Indian languages…

Home அடடே... அப்படியா? ஜென்ம நட்சத்திரத்தின் மகிமை …

ஜென்ம நட்சத்திரத்தின் மகிமை …

IMG 20230116 WA0008 1 - Dhinasari Tamil

கடவுளுக்கு மட்டும் இல்லை ஜென்ம நட்சத்திரம்.மனிதர்களுக்கும் உண்டு.நாம் பிறந்த ஜென்ம நட்சத்திரத்தில்
இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா
ஜென்ம நட்சத்திரத்தின் மகிமை அளப்பரியது.

சந்திரன் எந்த ஒரு ராசியில், ஏதோ ஒரு நட்சத்திர பாதத்தில் இருப்பார்.அதுவே நாம் பிறந்த நட்சத்திரம் அல்லது ஜென்ம நட்சத்திரம் என்கிறோம்.பிறந்த நட்சத்திரம் மற்றும் அந்த நட்சத்திரத்திற்கு அதிபதியானவர் நம் உடலை இயக்குபவர்.

கர்ம வினைகளுக்கேற்ப நம் உடல் அனுபவிக்கும் நன்மைகளுக்கு காரணமானவர்கள் இந்த ஜென்ம நட்சத்திரம் மற்றும் அதன் அதிபதி ஆவார்கள்.குறிப்பாக ஆலய வழிபாட்டிற்கு மிக, மிக உகந்த தினமாக ஜென்ம நட்சத்திர தினம் குறிப்பிடப்பட்டுள்ளது.ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஜென்ம நட்சத்திரம் அன்று கோவிலுக்குச் சென்று அர்ச்சனைகள் செய்து வழிபட வேண்டும் என்று சொல்லி வைத்தார்கள்.அவ்வாறு வழிபடுவதால் நம் துன்பங்களின் தாக்கத்தை பெருமளவு குறைத்துக்கொள்ள முடியும்.

ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஜென்ம நட்சத்திரங்கள்தான் அனைத்து வித தோஷங்களுக்கும் பரிகாரம் செய்ய உகந்த நாட்களாகும்.ஜென்ம நட்சத்திர தினத்தன்று செய்யப்படும் வழிபாட்டால், எந்தவொரு தெய்வமும் அருள் செய்தே தீர வேண்டும் என்பது பிரபஞ்ச இறை சட்டமாகும்.ஜென்ம நட்சத்திர வழிபாட்டில் உள்ள ஆன்மீக ரகசியமே இதுதான்.

எனவே, ஜென்ம நட்சத்திர வழிபாட்டு வாய்ப்பை ஒரு போதும் தவறவிட்டு விடாதீர்கள்.குறைந்தபட்சம் ஆலயத்தில் ஒரு அகல் விளக்காவது ஏற்றி வழிபாடு செய்யுங்கள்.உங்கள் ஜாதகத்தின் மூலம் (தீமைகள் அகல, தோஷம் விலக) எந்த கடவுளை வழிபட வேண்டும் என்று தெரிந்து வைத்துக்கொண்டு வழிபாடு செய்தால் கர்ம வினைகள் தீரும் என்பது குறிப்பிடத்தக்கது.

பலன்கள் :

ஜென்ம நட்சத்திர பூஜை முடிந்ததும், ஏழை – எளியவர்களுக்கு உங்களால் முடிந்த தானங்கள் செய்தால், பித்ருக்களின் ஆசி கிடைக்கும்.ஜென்ம நட்சத்திர வழிபாட்டை ஒருவர் தொடர்ந்து செய்து வந்தால் அவரை கண் திருஷ்டி நெருங்காது.தடைபடும் செயல்கள் அனைத்திலும் ஜெயம் உண்டாகும்.

ஜென்ம நட்சத்திர தினத்தன்று அவரவர் தகுதிக்கேற்ப ஆலயங்களில் மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் செய்வது அல்லது
பணம் இல்லாத பட்சத்தில் கவலைப்பட வேண்டாம் உடலால் கோவிலுக்கு உபகாரம் செய்வது மிகவும் நல்லது.

வசதி இருப்பவர்கள் ஜென்ம நட்சத்திரம் அன்று கணபதி ஹோமம் சுதர்சன ஹோமம் செய்தால் கூடுதல் பலனை பெற முடியும்.ஒவ்வொரு மாதமும் ஜென்ம நட்சத்திரம் எந்த தேதியில் வருகிறது என்பதை நாட்காட்டியில் குறித்து வைத்துக்கொண்டு அன்றைய தினம் எவ்வளவு வேலை இருந்தாலும் சிறிது நேரம் ஒதுக்கி குல தெய்வ ஆலயத்திற்கு அல்லது எதோ ஒரு ஆலயத்திற்கு சென்று தனது ஜென்ம நட்சத்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்வதால் நம் கஷ்டங்கள் ஓரளவு குறைந்து நல்லதே நடக்கும்.மற்றும் ஜென்ம நட்சத்திரத்தை பலம் பொருந்தியதாக மாற்றும்.அப்படி செல்ல முடியாத பட்சத்தில் பசுவைப் பார்த்தால் மாட்டிற்கு அருகம்புல் கொடுத்து ஒரு நமஸ்காரம் செய்யுங்கள் போதும்.அதுவே சகல தெய்வங்களையும் வணங்கியதற்குச் சமம்.

கர்மாவை மாற்ற முடியாது என்பது உண்மை ஆனால் பகவான் நினைத்தால் அதன் வீரியத்தை தாங்க கூடிய மனோ பாலத்தை தருவார்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

14 + two =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version