ராஜபாளையத்தில் வீட்டில் நெல்மணிகளில் பதுங்கி இருந்த நல்ல பாம்பால் பெரும் பரபரப்பு நிலவியது.
விருதுநகர் மாவட்டம்
ராஜபாளையம் அருகே வேட்டை பெருமாள் கோவில் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர்
அறுவடை செய்த நெல் மணிகளை வீட்டில் உள்ள பிளாஸ்டிக் ட்ரம்மில் வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று விவசாயி பாலசுப்ரமணியனின் மனைவி ஜோதி வீட்டில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது அவர்களது குழந்தை வழக்கத்திற்கு மாறாக நெல் நிரப்பி வைக்கப்பட்டிருக்கும் டிரம்மில் எலியின் வால் போன்று நீளமாக ஏதோ ஒன்று இருப்பதாக குழந்தைகள் தாயிடம் தெரிவித்துள்ளனர்.
நெல் பரப்பி வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் மூடியினை அப்புறப்படுத்தி பார்த்தபொழுது சுமார் 5 அடி நீளம் நல்ல பாம்பு பிளாஸ்டிக் ட்ரம் மூடியில் இருந்தது இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் தீயணைப்பு துறை வீரர்கள் பாம்பை பிடித்து ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வனப் பகுதியில் விட்டனர்.