
ராஜபாளையம் திமுக
எம்.எல்.ஏ.வுக்கு அதிமுக நகரச் செயலாளர் கொலை மிரட்டல் என எம்எல்ஏ காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம்
ராஜபாளையம் தொகுதி தங்கபாண்டியன் எம். எல். ஏ, சேத்தூர் போலீஸ் நிலையத்தில் வெள்ளிக்கிழமை திடிரென்று புகார் மனு அளித்தார்.
அதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேவதானத்தில் அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய ராஜபாளையம் நகரச் செயலாளர் முருகேசன் தன் மீது அவதூறு கருத்துக்களை கூறி கொலை மிரட்டல் எடுத்ததாகவும். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார் .
புகாரை பெற்றுக்கொண்ட போலிசார் அதன் அடிப்படையில் சேத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.மேலும் இந்த புகார் மனுவின் உண்மைத் தன்மையை விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த புகார் விருதுநகர் மாவட்டத்தில் அதிமுக,திமுக வில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.