விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் சிட்பண்ட் நடத்தி ரூ. 9 கோடி மோசடி செய்ததாக புகார் கூறி பாதிக்கப்பட்டவர்கள் வெள்ளி கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தை சேர்ந்த பழனிச்சாமி, செல்வராஜ் உள்ளிட்ட 7 பேர் இணைந்து எஸ்கேடி மற்றும் பிவிடி என்ற பெயரில் சிட் பண்ட் நடத்தி வந்துள்ளனர். இவர்களிடம் அப் பகுதியை சேர்ந்த 85 பேர் சுமார் ரூ. 9 கோடி வரை பணம் கட்டி உள்ளனர்.
சிட் பண்ட் நடத்தி வந்த 7 உரிமையாளர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் வாங்கிய பணத்தை திரும்ப வழங்காமல் கடந்த 8 மாதங்களாக ஏமாற்றி வருவதாக கூறி, பாதிக்கப்பட்டவர்கள் பழனிச்சாமியின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து பல முறை காவல் துறை மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டினர்.
பொது மக்களின் இந்த போராட்டத்தால் தளவாய்புரம் பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.
