
தமிழநாடு அரசு ரேஷன் கடைகளில் அரிசி வாங்கும் கார்டுதாரர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் தை பொங்கல் பரிசாக வழங்கிய அரிசு, சர்க்கரை கரும்புடன்ஷ, ரூ. 1,000 ரூபாயை வழங்க நிதி ஒதுக்கீடு செய்ததில் 4.40 லட்சம் கார்டு தாரர்கள் இதை வாங்கவில்லை என கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகை 1000 ரூபாய், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை ஒரு முழு கரும்பு வழங்க முதலவர் ஸ்டாலின் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தார்.பொங்கல் பரிசு பெற 2 கோடியே 18 லட்சத்து 86 ஆயிரத்து 123 அட்டைதாரர்கள் தகுதி பெற்றவர்கள் என்று கூறியிருந்த நிலையில், அதற்காக ரூ.1000 ஒதுக்கி அந்தந்த ரேஷன் கடைகளுக்கும் அனுப்பப்பட்டது.
அதன்படி தகுதியுள்ள 2 கோடியே 18 லட்சத்து 86 ஆயிரத்து 123 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பணம் ஒதுக்கப்பட்டு அந்த தொகை ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது..பொங்கலையொட்டி, ஒரு வாரம் பொங்கல் பரிசு விநியோகிக்கப்பட்டது.. இதை பெரும்பாலான அட்டைதாரர்கள் வாங்கி செல்ல ஆர்வம் காட்டினார்கள்.. ஆனாலும், ஒருசிலர் 1000 பணம் வேண்டாம் என்று விட்டுவிட்டனர.
ஆனால், தமிழ்நாடு முழுவதும் 4 லட்சத்து 39 ஆயிரத்து 669 குடும்ப அட்டைதாரர்கள் இந்த 1000 ரூபாய் பணத்தை,வாங்கவில்லை
என்று தற்போது கூட்டுறவு துறை மூலம் தெரியவந்துள்ளது.