சிறந்த நடிகர் , முற்போக்கான அரசியல் வாதி என பன்முக திறமை கொண்டு உடல்நலக்குறைவு டன் இருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று திருமண நாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
உடல்நலக் குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகியுள்ள விஜயகாந்த், இன்று தனது 33-வது திருமண நாளை குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார்.
விஜயகாந்த் – பிரமேலதா தம்பதியினர் திருமண நாளை கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்த புகைப்படத்தில் பிரமலதா சகோதரர் சுதிஷ், விஜயகாந்த் சண்முக பாண்டியன், விஜய் பிரபாகரன் உள்ளிட்டோர் உள்ளனர்.அதேபோல், இயக்குநரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர், விஜயகாந்த்தின் வீட்டிற்கு நேரில் சென்று திருமண நாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
அந்த புகைப்படத்தை டிவிட்டரில் பகிர்ந்துள்ள சந்திரசேகர், என் உயிரை சந்தித்த போது என்று பதிவிட்டுள்ளார்.பல்வேறு அரசியல் பிரமுகர்கள் திரையுலக பிரபலங்கள் விஜயகாந்த் க்கு திருமண வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.