
தேர்தலில் களம் காணத்துடிக்கும் சுயேட்சை வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்வதில்லை,பலருக்கும் சில நூறு வாக்குகள் கூட பதிவாவதில்லை.ஆனால் வித்தியாசமான முறையில் வேட்புமனு தாக்கல் செய்து பலரின் கவனத்தை பெறுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இன்று தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்க பொதுச் செயலாளர் என கூறி ஆறுமுகம் என்பவர் விதவை கோலத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக, தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்க பொதுச் செயலாளர் ஆறுமுகம் என்பவர் விதவை கோலத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். மதுவிலக்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விதவை கோலத்தில் வந்துள்ளதாகவும் தன்னை தேர்ந்தெடுத்தால் மதுவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து சட்டமன்றத்தில் பேசுவேன் எனவும்ஸ கூறியுள்ளார்.
தனது சின்னமான மது பாட்டிலை தேர்தல் நாள் அன்று மதுக்கடைகளை மூடி மறைத்து விடுகின்றனர் என கூறிய அவர், தேர்தல் நாளில் மதுக்கடைகள் திறந்து இருந்தால் தான் வெற்றி பெறுவேன் என்று குறிப்பிட்டார்.
ஏற்கனவே எங்கெல்லாம் தேர்தல் நடக்கிறதோ அங்கெல்லாம் வேட்புமனு தாக்கல் செய்யும் சத்யராஜின் இங்கும் சுயேட்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார்.சுயேட்சை வேட்பாளர்கள் பலர் காந்தி வேஷம் உட்பட பலரூபத்தில் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் இன்று ஆறுமுகமும் வித்தியாசமான முறையில் வேட்புமனு தாக்கல் செய்தார்