
அமெரிக்காவில் 2024ல் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடபோவதாக ஏற்கனவே முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த நிலையில் இந்திய வம்சாவளி அமெரிக்கா தொழிலதிபர் 37 வயதான விவேக் ராமசாமியும் களமிறங்க உள்ளது அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், கடந்த 2020-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்றுள்ளார். அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடையவுள்ளதால், இப்போதே அதிபர் தேர்தல் ஜூரம் அமெரிக்காவில் பரவத் தொடங்கிவிட்டது.

2024 அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் மீண்டும் ஜோ பைடனே போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே போல, குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மறுபடியும் களம் காண்பார் என்றே சில தினங்களுக்கு முன்பு வரை கூறப்பட்டு வந்தது.
குடியரசுக் கட்சியில் இருந்து வேறு எவரும் தன்னை எதிர்த்து வேட்பாளர் போட்டியில் நின்றுவிடக் கூடாது என்பதில் டிரம்ப்பும் கவனமாக இருந்தார். இதற்காக, குடியரசுக் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரிடம் பேசி தனக்கு ஆதரவை திரட்டி வருகிறார் டிரம்ப். இந்தநிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குடியரசு கட்சி சார்பில் போட்டியிடபோவதாக ஏற்கனவே டிரம்ப் அறிவித்த நிலையில் விவேக்கும் களமிறங்க உள்ளது அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அடுத்த அதிபர் தேர்தலிலும் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப்பே போட்டியிடுவார் எனக் கூறப்பட்ட சமயத்தில், அக்கட்சியில் இருந்தே அவருக்கு எதிராக பலரும் உருவாகி வருவது டிரம்புக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அதிபர் தேர்தலில் போட்டியிட தற்போது தயாராகி வரும் விவேக் ராமசாமி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மிகப்பெரிய கோடீஸ்வரர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் சுகாதாரப் பராமரிப்பு மற்றும் தொழில்நுட்பத் துறை நிறுவனங்களை நடத்திவரும் விவேக், அண்மையில் ‘ஃபாக்ஸ் நியூஸ்’ செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலின்போது தேர்தலில் க ம்ம் இயக்கப்போவது தெரிவித்தார்.
இவர் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர். அக்கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராகப் போட்டியிட முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹேலி இருவரும் ஏற்கெனவே விருப்பம் தெரிவித்துள்ளனர்.
விவேக்கின் பெற்றோர்களான விவேக் கணபதி – கீதா ராமசாமி கேரளாவின் பாலக்காடு மாவட்டம், வடக்கஞ்சேரியில் இருந்து அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தனர்.
ஒகையோவின் சின்சினாட்டி நகரில் பிறந்த விவேக், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திலும் யேல் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர்
இவர் இரண்டு நூல்களையும் பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார். ஒகையோ மாநிலப் பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராக இருக்கும் அபூர்வா திவாரி என்பவரை இவர் மணந்துகொண்டார்.
தகுதி அடிப்படையில் குடியேற்ற அனுமதி வழங்குவதை வலுவாக ஆதரிக்கும் விவேக், அதில் மென்மையான போக்கிற்கு அல்லது சட்ட மீறலுக்கும் இடம் தரமாட்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே பிரிட்டனில் இந்திய வம்சாவளி அதிபராக பதவியில் உள்ளார்.அமெரிக்க உப ஜனாதிபதி என பலர் அமெரிக்கா ஆட்சி மன்றத்தில் இந்திய வம்சாவளியினர் அங்கம் வகிக்கும் நிலையில் தற்போது அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் விவேக் ராமசாமி வெற்றி பெற்றால் இந்தியர்களுக்கு பெருமையே.