
டில்லி மாநகராட்சி கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியினர் மற்றும் பா.ஜ.,கட்சியினர் இடையே மூன்றாவது நாளாக இன்றும் மோதல் ஏற்பட்டது. ஷூக்களால் அடித்தும், தலை முடியை பிடித்து இழுத்தும் கவுன்சிலர்கள் ஒருவரை ஒருவர் தாக்குதல் நடத்தினர்.இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
புதுடில்லியில் மூன்று மாநகராட்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, அதற்கு டிச 4ல் தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 250 வார்டுகளில், ஆம் ஆத்மி,134 இடங்களில் வென்றது.

தொடர்ந்து, 14ஆண்டுகளாக மாநகராட்சியை தன் வசம் வைத்திருந்த பா.ஜ., 104 இடங்களில் வென்றது. மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் நடத்துவதில் ஆனால், ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ.க இடையே மூன்று முறை ஒத்தி வைக்கப்பட்டு கடந்த பிப்22 மேயர் தேர்தல் ஒரு வழியாக நடந்தது. இதில், ஆம் ஆத்மியின் ஷெல்லி ஓபராய், 34 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார்.
கடந்த இரு நாட்களாக நடந்த மாநகராட்சி கூட்டம் அமளியில் முடிந்தது. இந்நிலையில் இன்று மூன்றாவது நாள் மாநகராட்சி கூட்டம் துவங்கியது. ஆம் ஆத்மி கட்சிக்கும் பா.ஜ., கவுன்சிலர்கள் இடையே தொடர் மோதல் போக்கு இருந்தது.

ஒருவரையொருவர் தங்கள் அணிந்திருந்த காலணிகள், ஷூக்களாலும் தாக்கிக்கொண்டனர். பெண் கவுன்சிலர்கள் தலைமுடியை பிடித்து இழுத்து மல்லுக்கட்டினர். சட்டடையை கிழித்துக்கொண்டனர். இந்த களேபரத்திற்கிடையே ஒரு கவுன்சிலர் திடீரென மயங்கி விழுந்தார். அவரை சக கவுன்சிலர்கள் தூக்கிச்சென்றனர். இதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இந்தியாவின் தலைநகர் டெல்லி மாநகராட்சி கூட்டம் மூன்றாவது நாளாக கவுன்சிலர்கள் இடையே நடந்து வரும் சண்டை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.