தோசைக்கல்லில் தோசை மாவு ஊத்தி வார்க்கும் போது பலவிதமான தோசைகள் விதவிதமான சுவைகளில் கிடைக்கும்.மசாலா தோசை,காளான், பன்னீர் மசால் தோசை, மைசூர் மசால் தோசை ,என விதவிதமான பெயர்களில் கிடைத்த தோசை இப்போது 24காரட் தங்கம் கலந்து தங்கையாக வரும் கிடைக்கிறது.இதை சுவைக்க கர்நாடகா ஆந்திரா செல்லவேண்டும்.
கர்நாடக மாநிலம், துமகூரில் உள்ள ஒரு உணவகத்தில், புதிய முயற்சியாக தங்க முலாம் பூசப்பட்ட மசால் தோசை விற்பனை செய்யப்படுகிறது.
இங்கு, இந்த தோசையின் விலை 1,001 ரூபாய். தோசை தயாரித்து, அது சூடாக இருக்கும் போதே, 24 காரட் தங்க முலாம் பூசப்பட்ட மெல்லிய தாள் அதன் மீது வைக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது. இது, அங்கு பரபரப்பாக விற்பனையாகிறது. தினமும், 15 முதல் 20 தங்க மசால் தோசைகள் விற்பனையாகின்றன.
இதற்காக, குஜராத்தில் இருந்து தங்க முலாம் தாள்கள் வரவழைக்கப்படுகின்றன.இந்த தோசைக்கு, ‘கோல்டன் பாயில் எடிபல் மசால் தோசை’ என பெயரிடப்பட்டு உள்ளது. விலை அதிகமானாலும் தங்க தோசை சாப்பிட பலரும் ஆர்வத்துடன் வருவதாக உணவக ஊழியர்கள் கூறுகின்றனர்.
இதே போல் ஹைதராபாத்திலும் 24 கேரட் தங்க தோசை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஹைதராபாத் தில் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள ‘ஹவுஸ் ஆஃப் தோசாஸ்’ என்ற உணவகத்தில் 24 காரட் தங்க தோசை விற்பனைக்கு வந்துள்ளது. இந்த தோசையில் 24 கேரட் தங்க நெய் காகி தத்தை வைத்து தருவதால் இதன்விலை ரூ. 1000 ஆக நிர்ணயிக் கப்பட்டுள்ள இந்த தோசை சாப்பிட குடும்பம், குடும்பமாக வருகின்றனர். அதிலும் வார இறுதி நாட்களில் இந்த உணவகத்தில் கூட்டம் அதிகமாக உள்ளது.விரைவில் இந்த தங்கம் கலந்த மசால்தோசை சென்னையில் உள்ள பிரபல கடைகளிலும் கிடைக்கலாம்.