― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeபுகார் பெட்டிஜான் ரவி கைது, தமிழக காவல் துறை அத்துமீறல்; வலுக்கும் கண்டனங்கள்!

ஜான் ரவி கைது, தமிழக காவல் துறை அத்துமீறல்; வலுக்கும் கண்டனங்கள்!

- Advertisement -
john ravi arrested

ஜான் ரவி கைது, தமிழக காவல் துறை அத்துமீறல் : அஸ்வத்தாமன் கண்டனம

பிரபல சமூக ஊடக செயல்பாட்டாளர் ஜான் ரவி, அவரது ட்விட்டர் பதிவு ஒன்றிற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இதில் வேதனை என்னவென்றால், சாதாரண ட்விட் ஒன்றிற்கு தமிழக காவல்த்துறை விமானத்தில் குஜராத் சென்று அவரை கைது செய்து வந்திருப்பது தான். கல்யாணராமன், கிஷோர் கே. சாமி, மாரிதாஸ், கார்த்திக் கோபிநாத் வரிசையில் தனக்கு ஒவ்வாத கருத்துக்கு ஜான் ரவியை கைது செய்துள்ளது.

‘ கருத்துரிமை திராவிட மாடல் அரசு” ஜான் ரவி அவர்கள் விஷயத்தில் தமிழக காவல்துறையின் அத்துமீறல் எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது.என மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் அல்லிமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

தனது முக நூல் பதிவில் தெரிவித்ததாவது: “ஜான் ரவி அவர்கள் விஷயத்தில் தமிழக காவல்துறையின் அத்துமீறல் எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது. நேற்று இரவு தொடங்கி அவருடைய தூத்துக்குடி கன்னியாகுமரி சென்னை ஆகிய இடங்களில் உள்ள அலுவலகங்களில் காவல்துறை உரிய ஆணை இல்லாமல் அத்துமீறி சோதனை என்ற பெயரில் criminal trespass செய்து இருக்கிறது.

நேற்று இரவு 10:30 மணிக்கு, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அவரது மகள் மட்டும் தனியாக இருந்த சூழ்நிலையில் அவரது வீட்டின் கதவை 15 போலீசார் பலமாக தட்டி உள்ளனர். என்னுடைய இளவல் வழக்கறிஞர்களை அனுப்பிய பிறகே அவர்கள் வெளியேறினர். இப்பொழுது வழக்கில் எந்த விதத்திலும் தொடர்பே இல்லாத அவரது மகளை தரமணி காவல் நிலையத்திற்கு வர வேண்டும் என்று அலைபேசி மூலம் காவல்துறை கூறியிருக்கிறது.

என்னுடைய இளவல் வழக்கறிஞர்களை அனுப்பி உள்ளேன். இந்த விசயத்தில் தமிழக காவல்துறை, தங்களுடைய அத்துமீறல்களை, இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் சம்மந்தப்பட்ட ஒவ்வொரு காவலரும் மனித உரிமை ஆணையத்தின் முன்பு நிற்க வேண்டி இருக்கும் என்பதை எச்சரிக்கையாக சொல்லிக் கொள்கிறேன். ஜான் ரவி அவரது கருத்துக்காக கைது செய்யப்பட்டார் என்றால், அந்த வழக்கு அதோடு முடிந்து விட்டது. அதை விடுத்து அவரது குடும்பத்தினரை துன்புறுத்துவது ஏற்றுக் கொள்ளவே முடியாதது.” என பதிவிட்டுள்ளார்.

திமுக ஆட்சியில் காற்றில் பறக்கிறது கருத்து சுதந்திரம

கருத்துக்கும் கற்புண்டு கண்ணியமான சுதந்திரம் ஆனால் இங்கே காற்றில் பறக்கிறது கருத்து சுதந்திரம். மனிதர்கள் அடிப்படையில் தம் விருப்பு வெறுப்புகளில், கருத்துக்களில் வித்தியாசப்பட்டவர்கள். அவர்களின் சிந்தனைகளை, நம்பிக்கைகளை, வாழ்க்கை முறையை ஒரே கொட்டடிக்குள் அடைக்க நினைப்பது மிகக் கொடிய வன்முறை .

அதை தொடர்ந்து செய்யும் அரசை எதிர்த்து நின்று நாங்கள் கண்டிப்பாக கேள்வி கேட்போம். எதிர்கட்சியாக இருக்கும்போது கருத்து சுதந்திரம் பற்றி பேசிய திரு. ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் செய்து வரும் வேலைகளை எதிர்த்து கேள்வி கேட்பவர்களை கைது மூலம் தான் அடக்க வேண்டும் என்று நினைத்து கொண்டு கருத்து சுதந்திரத்தின் குரவளையை நெரிக்கும் விதமாக திரு ஜான் ரவியை கைது செய்ததை வன்மையாக கண்டிக்கின்றோம். உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள திரு. அர்னேஷ் குமார் வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் ஜான் ரவியை கைது செய்த நடைமுறை கண்டிக்கத்தக்கது. அவதூறான ட்வீட் மற்றும் பேச்சுகளுக்காக கைது செய்யப்பட வேண்டும் என்றால், பல திமுக ஆதரவாளர்களும் கட்சிக்காரர்களும் சிறையில் இருக்க வேண்டும்.

சமீபகாலமாக நமது பாரத நாட்டின் பிரதம மந்திரி திரு. நரேந்திர மோதிஜியை மற்றும் தமிழ்நாடு ஆளுநர் திரு. R.N ரவிஜியையும் கொச்சை படுத்தி பேசி வரும் திமுக ஆதரவாளர்களை தான் முதலில் கைது செய்ய வேண்டும். ஏன் இது மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நடவடிக்கை? திமுகவிற்கு எந்த அளவுக்கு கருத்து சுதந்திரம் உள்ளதோ அதேபோன்று தான் அனைவருக்கும் உள்ளது என்பதனை திமுகவைச் சேர்ந்த அமைச்சர்களும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இங்கே நடக்கும் கொலை கொள்ளைக்கு கைது இல்லை !! பெண்களுக்கு ஆன்லைன் மூலமாக வரும் பிரச்சனைகளுக்கு மற்றும் கற்பழிப்புக்கு கைது இல்லை !! தண்ணி டேங்கில் மலம் கலந்ததுக்கு கைது இல்லை!! இது மட்டுமா ? இறந்து போன இராணுவ வீரர் திரு பிரபு குடும்பம் பற்றி மேலும் எந்த ஒரு தகவல் இல்லை. ஆனால் டிவிட்டர் பதிவுக்கு மட்டும் கைது. இந்த அரசின் அராஜகத்தால் ஒரு தேச பக்தனை குஜராத் சென்று காவல் துறை கைது செய்துள்ளது.

இங்கே நடக்கும் அவலங்களை தட்டி கேட்க ஆள் இல்லை. அதுவும் இந்த ஆட்சியில் வேற கஜானா காலியாக உள்ளது என்று நிதி அமைச்சர் அவர்கள் அவ்வபோது கூறுகிறார். இந்த நிதி நிலையில் விமானத்தில் குஜராத் சென்று திரு ஜான் ரவியை கைது செய்ய எப்படி இது சாத்தியம்? அந்த வகையில் இங்கே நடக்கும் குற்றங்களை ஏன் அதை தடுக்க மனம் வரவில்லை?

காலத்தி னாற் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது. இந்த குறளின் விளக்கம் என்னவென்றால் நமக்கு நெருக்கடியான நேரத்தில் ஒருவர் செய்த உதவி அதன் அளவில் சிறியது என்றாலும், உதவிய நேரத்தை எண்ண அது இந்தப் பூமியை விட மிகப் பெரியதாகும்.

இது போன்ற திரு . ஜான் ரவி நிறைய நபர்களுக்கு உதவிய வண்ணம் உள்ளார். அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கையை முன் வைக்கிறோம். எல்லாம் வல்ல இறைவன் அருளால் அவர் வெகு சீக்கிரமாக விடுதலை ஆகி வர வேண்டும் என்று வேண்டுகிறேன். பாரத் மாதா கி ஜெய்.

– ஸ்வேதா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version