
வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை சரணாலயத்தில் நிலப்பறவைகள் கணக்கெடுப்பு பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
வேதாரண்யம் சரக பணியாளர்கள் மற்றும் மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரி மாணவ, மாணவிகள் , உதவி பேராசிரியர்கள், கோடியக்கரை அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் என 40-க்கும் மேற்பட்டவர்கள் வனச்சரக அலுவலர் அயூப்கான் தலைமையில் பறவைகளை இனம் கண்டறிந்து ,கணக்கெடுப்பு பணியில் ஈட்ப்பட்டுள்ளனர்.