spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?திருவாரூர் தூத்துக்குடி கொலை வழக்கில் தொடர்புடையவர்களை சுட்டுப்பிடித்த போலிசார்..

திருவாரூர் தூத்துக்குடி கொலை வழக்கில் தொடர்புடையவர்களை சுட்டுப்பிடித்த போலிசார்..

IMG 20230312 WA0046
பிடிபட்ட ரவி

திருவாரூர் தூத்துக்குடி கொலை வழக்கில் தொடர்புடையவர்களை போலிசார் சுட்டுப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூரில் கொலை வழக்கில் தொடர்புடையவரை தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டணம் அருகே சுட்டுப் பிடித்தனர்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் உள்ள பூவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (34). வளரும் தமிழகம் கட்சியின் மண்டல இளைஞரணி செயலாளரான  இவர் மீது இருபதுக்கும் மேற்பட்ட கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

இதனிடையே வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு தனது ஆதரவாளர்கள் உள்ளிட்ட நான்கு பேருடன்  வெள்ளிக்கிழமை வந்தவர், வழக்கு விசாரணை முடிந்தபிறகு கமலாபுரம் வழியாக காரில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த ஸ்கார்பியோ கார் ராஜ்குமார் பயணித்த காரின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. காரில் உள்ளவர்கள் டோர் லாக் ஆனதால் இறங்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

ராஜ்குமார் மட்டும் காரில் இருந்து இறங்கியபோது ஸ்கார்பியோ காரில் இருந்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த 8 பேர் கொண்ட கும்பல் அவரை துரத்தியது. ஒரு வீட்டிற்குள் நுழைந்து தப்பிக்க முயன்ற ராஜ்குமாரின் தலை கால்  உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் மூன்று தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடும் பணியினை தீவிரப்படுத்தினார்.

இந்த நிலையில் கொலை சம்பவம் நடந்த 12 மணி நேரத்தில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம்  ஒளிமதி கிராமத்தைச் சேர்ந்த ஸ்டாலின் பாரதி வயது 32, வீரபாண்டியன் வயது 29, சூர்யா வயது 21, அரசு வயது 20, மாதவன் வயது 21, ஆகிய ஐந்து நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் ஆய்வாளர்கள் ஜெகதீஸ்வரன் ராஜேஷ் இளங்கோ ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு மீதமுள்ள குற்றவாளிகளை தேடி வந்தனர்.

மேலும் கடந்த 11.10.2021 அன்று நீடாமங்கலம் கடை தெருவில் தலைத் துண்டித்து படுகொலை செய்யப்பட்ட நீடாமங்கலம் சிபிஐ ஒன்றிய செயலாளர் நடேசன் தமிழார்வனின் படுகொலைக்கு பழி தீர்க்கும் விதமாக இந்த படுகொலை நடந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள ஸ்டாலின் பாரதி என்பவர் நடேச தமிழார்வனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இந்த கொலை வழக்கில் தொடர்புடைய, திருவாரூர் அழகிரி காலனியைச் சேர்ந்த ரவி என்பவர் தங்சாவூர் மாவட்டம் 
சேதுபாவாசத்திரம் காவல் எல்லைக்குட்பட்ட மல்லிப்பட்டணம் மனோரா அருகில் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல் ஆய்வாளர் ராஜேஷ்  தலைமையிலான 
தனிப்படையினர் அவரை பிடிக்க முயன்றனர். அப்போது கையிலிருந்த அரிவாளால் போலீஸாரை வெட்டிவிட்டு தப்ப முயன்றுள்ளார்.

இதையடுத்து போலீஸார் அவருடைய காலில் சுட்டுப் பிடித்தனர். காயமடைந்த உதவி ஆய்வாளர் இளங்கோ, பட்டுக்கோட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பிடிபட்ட ரவி மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி வழக்குரைஞர் கொலை வழக்கு: குற்றவாளியை சுட்டுப்பிடித்த காவல் துறை..

1186320 chennai 03

தூத்துக்குடியில் வழக்குரைஞர் முத்துக்குமார் கொலை வழக்கில் தேடப்பட்டுவந்த முக்கிய குற்றவாளியான ஜெயப்பிரகாஷ் என்பவரை தூத்துக்குடி அருகே காவல் துறை இன்று காலையில்  சுற்றிவளைத்து கைது செய்ய முயன்றபோது, போலீசாரை அரிவாலால் தாக்கிப் தப்பிக்க முயன்ற ஜெயப்பிரகாசை காவல் துறை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

தூத்துக்குடியில் கடந்த பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி வழக்குரைஞர் முத்துக்குமார் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி உத்தரவின் பேரில் குற்றவாளிகளை கைது செய்ய 6 தனிப்படை அமைத்து காவல் துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

IMG 20230312 WA0069

இதில் 5 பேர் ஏற்கனவே நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் 3 பேரை காவல் துறை வெவ்வேறு இடங்களில் கைது செய்தனர்.
படிக்க | கொலை வழக்கில் தொடர்புடையவரை சுட்டுப்பிடித்த காவல் துறை!
இந்த வழக்கில் முக்கிய நபரான ஜெயபிரகாஷ் என்பவரைத் தேடி வந்தனர்.

அவரை காவல் துறை இன்று காலையில் தட்டப்பாரை அருகே துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளதாகவும், அவர் அரிவாளால் வெட்டியதில் 2 போலீசாருக்கு காயம் ஏற்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. பின்னர், அவர்கள் 3 பேரையும் காவல் துறை தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 2 போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
தூத்துக்குடி வழக்குரைஞர் முத்துக்குமார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயப்பிரகாஷ் என்பவர், தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை அருகே உள்ள மறவன் மடம் காட்டுப் பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து அந்த பகுதிக்கு சென்ற தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் ராஜ பிரபு, காவலர் சுடலைமணி  உள்ளிட்ட காவல் துறை, ஜெயப்பிரகாசை பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது ஜெயப்பிரகாஷ் அரிவாளால் தாக்கியதை காவல் துறை தாக்கினார்.


இதில், காவல் உதவி ஆய்வாளர் ராஜபிரபு, காவலர் சுடலை மணி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, காவல் துறை, ஜெயப்பிரகாஷை துப்பாக்கியால் சுட்டனர். இதில் முழங்காலுக்கு கீழே காயம் அடைந்த ஜெயபிரகாஷ் கீழே விழுந்துள்ளார்.

உடனடியாக  ஜெயப்பிரகாசை பிடித்து, அவரை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுதித்தனர். மேலும், இந்த சம்பவத்தில் காயமடைந்த காவல் உதவி ஆய்வாளர் ராஜபிரபு,  காவலர் சுடலைமணி ஆகியோரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த கொலை வழக்கில் நேரடி தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe