Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

spot_img

சற்று முன் :

சினிமா :

spot_img

ஆன்மிகம்:

― Advertisement ―

Homeஅடடே... அப்படியா?ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது..

ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது..

To Read in Indian languages…

ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.விருதைபெரும் மகிழ்ச்சி பொங்க படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி பெற்றுக் கொண்டார்.

95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. வாஷிங்டன், ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.

கீரவாணி இசையில் உருவான நாட்டு நாட்டு பாடல் ஏற்கனவே கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஆர்ஆர்ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த மூலப்பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.
அமெரிக்காவின் ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் இன்று காலை(இந்திய நேரப்படி) 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வு தொடங்கியது.
இந்நிலையில் சிறந்த மூலப்பாடல் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றிருந்த இந்தியாவின் ஆர்ஆர்ஆர் படத்தின்  ‘நாட்டு நாட்டு’ பாடல் விருதை வென்றுள்ளது.


இந்த விருதை இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணியும் (மரகதமணி), பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
முன்னதாக, சிறந்த ஆவணக் குறுப்படத்துக்கான விருதை இந்தியாவின் தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் வென்று சாதனை படைத்துள்ளது.

தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்’  (The Elephant Whisperers’) ஆவண குறும்படத்திற்காக படத்திற்காக இயக்குனர் கார்திகி குன்செல்வெஸ் மற்றும் ஒளிப்பதிவாளர் குனெட் மொன்கோ ஆஸ்கர் விருது வென்றனர்.   தாயை பிரிந்து தவித்த  குட்டியானைகளை வளர்க்கும் நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள தம்பதி பொம்மன்  – பொள்ளி மற்றும் ரவி என்ற குட்டி யானை குறித்த ஆவண குறும்படம் ‘தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்’-க்கும் ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.

யானைகளை பராமரிக்கும் நீலகிரி மாவட்டம் முதுமலை தம்பதி குறித்த ஆவண குறும்படமான ‘தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்’ (The Elephant Whisperers) ஆவண குறுப்படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. தாயை பிரிந்து தவித்த 2  குட்டி யானைகளை பராமரிக்கும் நீலகிரியின் முதுமலையை சேர்ந்த பொம்மன், பொம்மி தம்பதி குறித்த ஆவண குறும்படமான  ‘தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்’ படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது. ‘தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்’ ஆவண குறும்படத்தை இயக்கிய கார்திகி குன்செல்வெஸ் மற்றும் தயாரிப்பாளர் குனெட் மொன்கோ ஆஸ்கர் விருதை வென்றனர்.

ஆஸ்கர் மேடையில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் பாடப்பட்டது. பாடலுக்கு கலைஞர்கள் நடனமாடினர். பாடகர்கள் ராகுல் சிப்லிகுஞ்ச் மற்றும் கால பைரவா ஆகியோர் நாட்டு நாட்டு பாடலை ஆஸ்கர் மேடையில் பாடினர். கீரவாணி இசையில் உருவான நாட்டு நாட்டு பாடல் ஏற்கனவே கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த திரைக்கதைக்கான (Writing (Original Screenplay)) ஆஸ்கர் விருதை ஆல் குயிண்ட் ‘எவ்ரி திங்க் எவ்ரி வேர் ஆல் அட் ஒன்ஸ்’ (Everything Everywhere All at Once) திரைப்படத்திற்காக எழுத்தாளர்கள் டேனியல் கிவான் மற்றும் டேனியல் ஸ்கினெர்ட் வென்றனர் .

சிறந்த காட்சி அமைப்புக்கான (Visual Effects) ஆஸ்கர் விருதை ‘அவதார்: தி வே ஆப் வாட்டர்’ (Avatar: The Way of Water) படம் வென்றது. இந்த படத்தின் காட்சி அமைப்பாளர்கள் ஜோ லெட்டரி, ரிச்சட் பனிஹம், எரிக் சைண்டான் மற்றும் டேனியல் பெரிட் ஆகியோர் ஆஸ்கர் விருதை வென்றனர்.

சிறந்த வெளிநாட்டு திரைப்பட பின்னணி இசைக்கான ஆஸ்கர் விருதை ஆல் குயிண்ட் ஆன் தி வெஸ்டர்ன் பிரண்ட் (All Quiet on the Western Front) திரைப்படத்திற்காக வால்கர் பிர்டெல்மென் வென்றார்.

சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருதை தவறவிட்டது இந்தியாவின் ‘ஆல் தட் ப்ரீத்ஸ்’ சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான (Production Design) ஆஸ்கர் விருதை ஆல் குயிண்ட் ஆன் தி வெஸ்டர்ன் பிரண்ட் (All Quiet on the Western Front ) படத்திற்காக கிறிஸ்டின் எம் கோல்ட்பெக் மற்றும் எர்னிஸ்டன் ஹிம்பர் வென்றனர் .

சிறந்த அணிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை ‘தி பாய், தி மொலி, தி பாக்ஸ் அண்ட் தி ஹார்ஸ்’ (The Boy, the Mole, the Fox and the Horse) படத்திற்காக சார்லி மெகிசி மற்றும் மேதிவ் பிரிடு வென்றனர்.

சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான ஆஸ்கர் விருதை ‘பிளாக் பேந்தர்ஸ்: விஹண்டா பார்எவர்’ (Black Panther: Wakanda Forever) படத்திற்காக ரூத் கார்டர் வென்றார்.

சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்திற்கான (Best Makeup and Hairstyling) ஆஸ்கர் விருதை தி வேல்ஸ் (The Whale) படத்திற்காக அட்ரின் மொரொட், ஜூடி சின், அனிமேரி பிராட்லி வென்றனர்.

சிறந்த ஒளிப்பதிவுக்கான (Best Cinematography) ஆஸ்கர் விருதை ‘ஆல் குயிண்ட் ஆன் தி வெஸ்ட்டர்ன் பாண்ட்’ (All Quiet on the Western Front) படத்திற்காக ஜேம்ஸ் பிரண்ட் வென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − seven =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Follow us on Social Media

19,023FansLike
389FollowersFollow
84FollowersFollow
0FollowersFollow
4,766FollowersFollow
17,300SubscribersSubscribe