- Advertisement -
Home அடடே... அப்படியா? 7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த துணை நடிகருக்கான விருதை KeHuy Quan பெற்றார். சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை Jamie Lee Curtis பெற்றார்.

அகாடமி விருது எனப்படும் 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை, சிறந்த துணை நடிகர் ஆகிய 7 பிரிவுகளில் ‘Everything Everywhere All at Once’ திரைப்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது. சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் (Everything Everywhere All At Once) திரைப்படம் வென்றது. சிறந்த நடிகைக்கான விருது மிஷெல் யோ வென்றார். ஆஸ்கர் விருது வென்ற முதல் ஆசிய பெண் இவர் என்ற என்ற சாதனையையும் படைத்தார். சிறந்த துணை நடிகருக்கான விருதை KeHuy Quan பெற்றார். சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை Jamie Lee Curtis பெற்றார்.

சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதை எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் (Everything Everywhere All At Once) திரைப்படத்திற்காக இயக்குனர்கள் டேனியல் கிவான் (Daniel Kwan) மற்றும் டேனியல் ஸ்கினெர்ட் (Daniel Scheinert) வென்றனர். சிறந்த படத்தொகுப்பிற்கான ஆஸ்கர் விருதை எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் (Everything Everywhere All At Once) திரைப்படத்திற்காக பால் ரோஜர்ஸ் வென்றார். சிறந்த திரைக்கதைக்கான விருதையும் ‘Everything Everywhere All At Once’ திரைப்படம் வென்றுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

15 + sixteen =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version