More

    Shut up. Shall We?

    A Centenary Plus, Retold 

    Homeஅடடே... அப்படியா?இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா..
    spot_img

    சினிமா...

    Featured Articles

    To Read in Indian languages…

    இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா..

    இந்தியாவில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

    நேற்று பாதிப்பு 1,890-ஆக இருந்த நிலையில், இன்று புதிதாக 1,805 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 397, குஜராத்தில் 303, கேரளாவில் 299, கர்நாடகாவில் 209, டெல்லியில் 153 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 47 லட்சத்து 5 ஆயிரத்து 952 ஆக உயர்ந்துள்ளது.

    தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 932 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 64 ஆயிரத்து 815 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 10,300-ஆக உயர்ந்துள்ளது.

    இது நேற்றைவிட 867 அதிகம் ஆகும். கொரோனா பாதிப்பால் நேற்று குஜராத், சண்டிகர், இமாச்சல பிரதேசம், உத்தரபிரதேசத்தில் தலா ஒருவர் என 4 பேர் இறந்துள்ளனர். மேலும் கேரளாவில் விடுபட்ட பலிகளில் 2-ஐ கணக்கில் சேர்த்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,30,837 ஆக உயர்ந்துள்ளது.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    one × one =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Exit mobile version