
திருநெல்வேலி மாவட்டத்தில் விசாரணை கைதிகளின் 30 பேர் பல்லை பிடுங்கியதாக புகார் எதிரொலி உதவி எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.உதவி எஸ்பிரித் செயலால் 5 போலீஸ் நிலையங்களில் குற்ற செயல்களில் ஈடுபட்ட சுமார் 30 பேர் வரை தங்களது பற்களை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. பற்களை பிடுங்கி காயம் ஏற்படுத்தியதாக சமூக வலைதளங்களில் தகவல்களும் பரப்பப்பட்டு வந்தது.
நெல்லை மாவட்டம் அம்பை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் குற்ற சம்பவங்கள் தொடர்பாக உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் விசாரணை நடத்தி வருகிறார்.
அவர் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்று அவர்களது பற்களை பிடுங்கி கொடூர செயலில் ஈடுபடுவதாக சமீபத்தில் சிலர் புகார் கூறினர்.
அவர் பற்களை பிடுங்கி காயம் ஏற்படுத்தியதாக சமூக வலைதளங்களில் தகவல்களும் பரப்பப்பட்டு வந்தது. இதுவரையிலும் அம்பை சரகத்திற்கு உட்பட்ட அம்பை, கல்லிடைக்குறிச்சி, வி.கே.புரம், பாப்பாக்குடி, அம்பை மகளிர் போலீஸ் உள்ளிட்ட 5 போலீஸ் நிலையங்களில் குற்ற செயல்களில் ஈடுபட்ட சுமார் 30 பேர் வரை தங்களது பற்களை இழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் உதவி எஸ்.பி. பல்வீர் சிங் போலீஸ் விசாரணைக்கு வந்தவர்களின் பல்லை பிடுங்கியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.