
ராஜபாளையம் நகராட்சி அவசரக் கூட்டம் நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷ்யாம் முன்னிலையில் நடைபெற்றது. திமுக கவுன்சிலர்களுக்
கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.அதிகாரிகள் அலட்சியத்துடன் செயல்படுவதாக நகர்மன்ற துணைத் தலைவர் சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் மன்ற அவசரக் கூட்டம் இராஜபாளையம் நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி தலைமையில் நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷ்யாம் முன்னிலையில் நகர்மன்ற அவசரக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக கடந்த 2020 ஆம் ஆண்டு குடிநீர் வடிகால் வாரியத்தினால் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு வசூல் செய்யப்பட்ட வந்த நிலையில் தற்போது வரை தாமிரபரணி கூட்டுக் குடிநீர் வழங்காததால் கட்டண வசூல் செய்வதையும் கட்டண உயர்வை குறைக்க வேண்டும் என நகர்மன்ற கூட்டத்தில் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டது .
அதன் அடிப்படையில் வராத தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு வசூலை நிறுத்திவிட்டு ஏற்கனவே வாங்கப்படும் கட்டணத்தை மட்டும் வசூல் செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இதற்கு அனைத்து கவுன்சிலர்களும் நன்றி தெரிவித்து பாராட்ட தெரிவித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் நகர் மன்ற துணைத் தலைவரும் 32வது வார்டு கவுன்சிலருமான கல்பனா (திமுக)அதிகாரிகள் எந்த வேலையும் செய்வதில்லை என் பகுதியில் கடந்த ஆறு மாதமாக கழிப்பறை செயல்படாமல் உள்ளதாகவும் அதற்கு வேலை செய்ய பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை செய்யவில்லை என அதிகாரியிடம் வாக்குவாதத்தை ஈடுபட்டார்.
இதை தொடர்ந்து 4வது வார்டு கவுன்சிலர் மீனாட்சி (அதிமுக) தங்கள் பகுதிக்கு சுகாதார பணியாளர்கள் வராமல் தூய்மைப் பணிகள் நடைபெறாமல் இருக்கிறது இதனால் குப்பைகள் தேங்கி நோய் தொற்று ஏற்படுகிறது என குற்றம் சாட்டினார் அப்போது குறுக்கிட்டு பேசிய திமுக கவுன்சிலர் கென்னடி ( 39 வார்டு.,மற்றும் 12வது வார்டு கவுன்சிலர் குமார் ஆகியோர் அதிமுக பெண் கவுன்சிலர் ஒருமையில் பேசினார்.
அதற்கு எதிப்பு தெரிவித்து திமுக கவுன்சிலரும் திமுக மகளிர் செயலாளர் சுமதி ராமமூர்த்தி எதிர்ப்பு தெரிவித்தார் இதை தொடர்ந்து மற்றொரு திமுக கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் என்பவரும் எதிர்ப்பு தெரிவித்த இதேபோல் பல பெண் கவுன்சிலர்களும் பெண் கவுன்சிலரை ஒருமையில் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் இதனால் திமுக கவுன்சிலர்களுக் கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது வாக்குவாதத்தினால் கூட்டம் நிறைவு பெற்றது என கூறி நகர் மன்ற தலைவர் எழுந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த அவசர கூட்டத்தில் தீர்மானம் 1 92 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட
தாகவும் அறிவிப்பு செய்யப்பட்டது நகர்மன்ற கூட்டத்தில் திமுக கவுன்சிலர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் நகர்மன்ற கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது