மதுரை சித்திரைத் திருவிழா ஏப்23ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முக்கிய நிகழ்வான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் மே 2ம் தேதியும், வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் அழகர் இறங்கும் நிகழ்ச்சி மே 5ம் தேதியும் நடக்கின்றன.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்23ல் காலை 10:35 மணி முதல் 10:59 மணிக்குள் நடக்கிறது.
இதை தொடர்ந்து தினமும் காலை, மாலை அம்மனும், சுவாமியும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகின்றனர். ஏப்30ல் இரவு 7:05 மணி முதல் 7:29 மணிக்குள் அம்மனுக்கு பட்டாபிேஷகம் நடக்கிறது.
மே 1ல் திக்குவிஜயம், மே 2ல் காலை 8:35 மணி முதல் 8:59 மணிக்குள் திருக்கல்யாணம் நடக்கிறது. மே 3ம் தேதி காலை 6:00 மணிக்கு மாசி வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது.
மே 4ல் மீனாட்சி கோயில் சித்திரைத் திருவிழா நிறைவு பெறுகிறது. அதேநாளில் அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் அலங்காரத்தில் மதுரை வரும் அழகரை வரவேற்று எதிர்சேவை நடக்கிறது. மே 5ம் தேதி வைகையாற்றில் தங்க குதிரை வாகனத்தில் அழகர் இறங்குகிறார்.
12 ஆயிரம் பேர் காண ஏற்பாடு
திருக்கல்யாணத்தை பக்தர்கள் காண ஆடி வீதிகளில் தகர ஷீட் பந்தல் அமைக்கப்படுகிறது. திருக்கல்யாண மேடையில் 300 டன் குளிர்சாதன வசதியும், திருக்கல்யாண மண்டபத்தில் 100 டன் குளிர்சாதன வசதியும் செய்யப்பட உள்ளது. 6 ஆயிரம் பேர் முன்னுரிமை அடிப்படையில் இலவச தரிசனமாக தெற்கு கோபுரம் வழியாக அனுமதிக்கப்பட உள்ளனர். 2500 பேருக்கு ரூ.500 கட்டண சீட்டு வழங்கப்படுகிறது.இவர்கள் வடக்கு கோபுரம் வழியாக செல்ல வேண்டும். 3500 பேருக்கு ரூ.200 கட்டண சீட்டு வழங்கப்பட்டு வடக்கு கோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவர்.
னஉயர்நீதிமன்ற உத்தரவு காரணமாக இலவச பாஸ் கிடையாது. கோயில் வளாகம், வெளியே 20 இடங்களில் எல்.இ.டி.திரைகள் வைக்கப்பட உள்ளன.