
பாகுபலி கெட்டப்பில் கையில் வாளுடன் நிற்பது போன்று எடப்பாடி பழனிசாமிக்கு பிரமாண்ட கட்-அவுட் ஒன்றை கோவை விளாங்குறிச்சி பகுதியில் வைத்துள்ளனர். கட்-அவுட்டில் தமிழக மக்களின் பாகுபலியே, கழக பொதுச் செயலாளரே உங்களை வாழ்த்தி வணங்குகிறோம் என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு சட்ட போராட்டங்களுக்கு பிறகு தற்போது அ.தி.மு.க. பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
இந்த வெற்றியை அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக கோவை விளாங்குறிச்சி பகுதியில் அ.தி.மு.க.வினர் பாகுபலி கெட்டப்பில் கையில் வாளுடன் நிற்பது போன்று எடப்பாடி பழனிசாமிக்கு பிரமாண்ட கட்-அவுட் ஒன்றை வைத்துள்ளனர்.
இதில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. அவர் எடப்பாடி பழனிசாமியிடம் எதிரிகளை விரட்டியடி, தொண்டர்களை ஒன்று சேர், இதுவே என் கட்டளை, கட்டளையே என்ற சாசனம் என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது.
மேலும் கட்-அவுட்டில் தமிழக மக்களின் பாகுபலியே, கழக பொதுச் செயலாளரே உங்களை வாழ்த்தி வணங்குகிறோம் என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது. எடப்பாடி பழனிசரியின் இந்த பாகுபலி கட்-அவுட் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.