
கோடை மழையால் திருப்பூர் அருகே திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் அதிகம் வருவதால் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர்.
திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் தற்போது மிதமான அளவில் தண்ணீர் கொட்டுகிறது.
அமாவாசை, பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் அமணலிங்கேஸ்வரர் கோயிலுக்கு பக்தர்கள் வருவார்கள். மேலும் படிக்க உடுமலை: கடும் வெயில் காரணமாக திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந் து வருகின்றனர்.
உடுலை அருகே உள்ள திருமூர்த்திமலையில் அமணலிங்கேஸ்வரர் கோயில், பஞ்சலிங்க அருவி, வண்ண மீன் காட்சியகம், நீச்சல்குளம், திருமூர்த்திமலை ஆகியவை உள்ளன. தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வருகின்றனர்.
அமாவாசை, பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் அமணலிங்கேஸ்வரர் கோயிலுக்கு பக்தர்கள் வருவார்கள். தற்போது கோடை துவங்கியுள்ள நிலையில் வெயில் வாட்டி வதைக்கிறது.
மேலும் 11,12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வும் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து சுற்றுலா தலங்களை நோக்கி மக்கள் படையெடுக்க துவங்கி விட்டனர். குறிப்பாக அருவி, ஆறு, குளம் உள்ள பகுதிகளுக்கு அதிகளவில் செல்கின்றனர்.
திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் தற்போது மிதமான அளவில் தண்ணீர் கொட்டுகிறது. வெயிலுக்கு இதமாக அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர். உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து அருவியில் குளிக்கின்றனர்.
ெனஇதேபோல் அமராவதி ஆறு பகுதிக்கும் ஏராள மானோர் செல்கின்றனர். ஆற்றில் தற்போது தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டு விட்டாலும் ஆங்காங்கே பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. குமரலிங்கம் பகுதியில் உள்ள அமராவதி ஆற்றில் தேங்கிய தண்ணீரில் உள்ளூர் மக்கள் நீராடி செல்கின்றனர்.