-’ஜெய்ஹிந்த்’ ஸ்ரீராம்
ஒடிசா ரயில் விபத்து நடந்த பகுதியில் நேற்று பின்னிரவில் சரக்கு ரயில் போக்குவரத்து நடந்தது.
அதிர்ந்து போய் இருக்கிறது உலக நாடுகள்…. கிட்டத்தட்ட 290 பேருக்கு மேல் காவு வாங்கிய மிகப் பெரிய விபத்து இது.... அந்த பகுதியே போர்க்களம் போன்று காட்சி அளிக்கும் தருணத்தில்…. மீட்பு பணிகள் முடிவடைந்து….. இடிபாடுகள் அகற்றப்பட்டு… ரயில் பாதை சீரமைக்கப்பட்டு….. போக்குவரத்தை தொடங்கி இருக்கிறார்கள் என்றால்….. எப்பேர்ப்பட்ட மனித ஆற்றலால் இது சாத்தியம் என மலைத்து நிற்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
நடந்தது கோர விபத்து….
அதில் சந்தேகம் இல்லை. யார் தவறு எது தவறு என்பதை கண்டுபிடிக்காமல் விடப் போவதில்லை… ஆனால் அதற்காக அதையே பேசி விசனப்பட்டுக் கொண்டிருப்பதில் பிரயோஜனம் இல்லை என்று நம்மவர்கள் உலகிற்கு பாடம் நடத்தி இருக்கிறார்கள்.
பிரதமர் நிகழ்விடத்திற்கு வந்து சென்று இருக்கிறார்.
மத்திய ரயில்வே துறை அமைச்சர் திரு அஸ்வின் வைஷ்ணவ் அங்கேயே தங்கி விட்டார். பிறகு என்ன…..அசுர வேகத்தில் மீட்பு பணிகள் நடந்தது. விபத்தில் சிக்கியவர்களை மீட்டுக் கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றும் போகும் வழியில் மீண்டும் ஒரு முறை விபத்தில் சிக்க நேர்ந்தது…. பாலசோர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்த இளைஞர்கள் களத்தில் இறங்கினர்…இனி ஒரு விபத்து இந்த பகுதியில் இருக்கக்கூடாது என கங்கணம் கட்டிக் கொண்டு வேலை பார்த்தனர்….. யாரும் அவர்களுக்கு சொல்லித் தரவில்லை.. சுத்தமான குடி தண்ணீரும் குலுக்கோஸூம் விடாமல் சப்ளை செய்து இருக்கிறார்கள்… சுயம் சேவகர்கள் எனும் இந்தியாவின் இரண்டாவது ஆர்மி களத்தில் இறங்கி இருக்கிறார்கள்.
ரத்தத்தானமும் போதும் போதும் எனும் அளவிற்கு நடந்திருக்கிறது…பசி என்று ஒருவரும் சொல்லவில்லை என்றால் நீங்களே யூகித்து கொள்ளுங்கள். இவையெல்லாம் தான் உலகத்தவரை ஆடி நிற்க செய்திருக்கிறது.
விபத்து குறித்து பல்வேறு கட்ட தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன…. ஆனால் யாரும் இவற்றை எல்லாம் பேசவே இல்லை….
விபத்து நடந்த ரயிலில் கடந்த ஆண்டு நம் இந்திய ரயில்வே அறிமுகம் செய்த ரயில் கவச் பொருத்தப்பட்டு இருந்ததா…. விபத்து குறித்து ஏன் முன்கூட்டியே பின்னால் வந்த பெங்களூரு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டவில்லை என்றெல்லாம் யூகங்கள் கிளம்பி கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால்……..
இஃது யாருமே எதிர்பார்த்திராத விபத்து என்று தான் இத்துறை வல்லுனர்கள் சொல்லியிருக்கிறார்கள்… கிட்டத்தட்ட நம் இந்திய முதல் ராணுவ தலைமை தளபதி திருவாளர் திரு பிபின் ராவத் எப்படி நம் தமிழகத்தில் உள்ள வெலிங்டன் அருகில் விபத்தில் சிக்கி அவரும் அவருடைய மனைவி மற்றும் சக ராணுவ அதிகாரிகள்…, மரணம் அடைந்தாரோ அதுபோலவே இதுவும் ஒரு விபத்தாக இருப்பதற்கே 99.9% வாய்ப்புகள் அதிகம்.
அதி நவீன வசதிகளுடன் கூடிய மின்னணு உபகரணங்கள் கொண்ட இந்தியாவின் அதி வேக ரயில்கள் இயங்கும் வழித்தடத்தில் இந்த ரயில் பாதையும் வருகிறது. ஆன போதிலும் இந்த விபத்து நடந்திருக்கிறது. இங்கு பொருத்தப்பட்டிருப்பது ரூட்டர் ரிலே இண்டர் லாக்கிங் அமைப்பு கொண்டுயிருக்கிறது என்கிறார்கள்….. உலகம் முழுவதும் உள்ள அதிநவீன வசதிகளுடன் கூடிய அமைப்பிற்கு பேர் போன இவற்றில் தவறு நடக்க வாய்ப்பே இல்லை என்கிறார்கள்.
ஒரு வேளை தவறு நேர்ந்து என்றால் அது என்ன மாதிரியான தவறு என்பதை அறிந்து கொள்ள உலகமே காத்துக் கொண்டு இருப்பதாகவும் சொல்கிறார்கள். ஆதலால் இதனை பிபின் ராவத் விபத்தை ஒட்டி நடந்த ஆராய்ச்சி போன்றதொரு ஆராய்ந்து பார்க்கும் அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார்கள். சமீபத்திய நாட்களில் இந்திய ரயில்வே துறை மகத்தான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது…. அது வழங்கும் சேவைகளில் குறைகள் இருந்தாலும் அது சிரம்மேற்கொண்டு செயல்படும் விதம் அளப்பரியது. அரசு இயந்திரங்களில் இந்திய ரயில்வே துறைக்கு மிக முக்கியமான பங்களிப்பு உண்டு.அதற்கு ரயில்வே பட்ஜெட்டே சான்று.இந்த உலகில் இயங்கும் அரசு நிறுவனங்களில் இந்திய ரயில்வே முதல் இடத்தில் இருக்கிறது என்பதை நம்மில் பலரும் உணர்வதேயில்லை .
ஏதோ சிக்கனலை மாற்றி யாரோ வேண்டும் என்றே தவறு செய்திருப்பதாக போகிற போக்கில் அடித்துவிடுகிறார்கள்…. அவ்வாறெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை.மெயின் லைன்னில் பயணித்து இருக்க வேண்டிய ரயில் எப்படி எவ்வாறு லூப் லைனில் சென்றது என்பதை குறித்தே தற்போதைக்கு ஆராய வேண்டி இருக்கிறது என்கிறார்கள்.
சரியாக சொல்வதென்றால் சடுதியில் இவ்வாறு எந்த ஒரு நபராலும் மாற்றம் செய்ய முடியாது. அதற்கு தான் மின்னணு இண்டர் லாக்கிங் அமைப்பு இருக்கிறது. மாற்றம் செய்ய வேண்டும் என்றால் முழு நிர்வாகத்திற்கும் தெரியவரும். அல்லது அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தான் மாற்றம் செய்ய வேண்டும். அப்படியே மாற்றி இருந்தாலும்கூட இந்த மின்னணு உபகரணங்கள் அவற்றை அனுமதிக்காது. சிக்னல் கொடுக்காது என்கிறார்கள். இன்னமும் சரியாக சொல்வதென்றால் பச்சை நிறத்தில் இருக்கும் சிக்னல் சிவப்பு நிறத்திற்கு மாறி பின்னர் மீண்டும் பச்சை விழ குறைந்த பட்சம் 3 நிமிடங்கள் ஆகும்… அதாவது ரயில் முழுமையாக அந்த தடத்தை கடந்த பின்னரே சிக்னல் விழும். அதுவரை ரயில் பாதையை மாற்றம் செய்ய முடியாது. தவிர மாற்றம் செய்ய நினைக்கும் பாதையில் ஏற்கனவே ரயில் பயணித்து அடுத்த சிக்னலை கடக்கவில்லை என்றாலும்கூட இது வேறோர் ரயிலை அந்த பாதையில் இயக்க அனுமதிக்காது.
இது சரி என்றால் லூப் லைனில் சரக்கு ரயில் நின்று கொண்டு இருந்த பாதை மூடப்பட்டு அந்த பாதையில் மற்ற ரயில்கள் பயணிக்க சிக்கல் கிடைக்க வாய்ப்பே இல்லை. சரக்கு ரயில் நின்று கொண்டு இருந்த தண்டவாளமும் இரண்டு பக்கமுமான பாதை அணுகிட முடியாத படிக்கு ஜங்ஷன் கட் ஏற்படுத்தப்பட்டு இருக்கும்.அப்படி இருந்தால் மட்டுமே இந்த மின்னணு சாதனம் அந்த பக்கம் உள்ள மற்ற பாதையை பயன் படுத்தவே அனுமதிக்கும்.
இவ்வளவு பாதுகாப்பு முறைமைகளை கடைபிடிக்கக்கூடிய சாதனங்கள் பொருத்தப்பட்ட ரயில் பாதையில் …. சரக்கு ரயில் நின்று கொண்டு இருந்த ரயில் பாதையிலேயே மற்றொரு ரயில் செல்ல இந்த சிக்னல் விழுந்திருக்கிறது எப்படி என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி.
ஒரு வேளை மின்னணு உபகரணங்களை ஹேக் செய்து செயற்கையாக இந்த விபத்து நடந்ததாகவே வைத்து கொண்டாலும்……. நிஜத்தில் அந்த ரயில் பாதை ஜங்ஷன் கட் செய்ய மனித எத்தனம் தேவை. இதனை செய்ய அந்த பகுதி ஸ்டேஷன் மாஸ்டர், தொழில்நுட்ப வல்லுநரான இஞ்சினியர்., மற்றும் லைன் மேன் இவர்கள் வசம் உள்ள கீ யை கொண்டே ஒரே நேரத்தில் இயக்கி அந்த லூப் லைனில் மாற்றம் செய்ய வேண்டும்……
இஃது சாத்தியமா….?????
ரயில் பாதையை நாசம் செய்யலாமே தவிர மாற்றம் செய்ய கனவிலும் நடக்கக் கூடிய சமாச்சாரம் அல்ல என்று புரிந்து கொள்ள முடியும். ஆனாலும் விபத்து நடந்திருக்கிறது.
ஆக….மிகத் தீவிரமான ஆராய்ச்சி தேவைப் படுகிறது.
எல்லாம் கிடக்க…..
ஓர் நடுவந்தர பைத்தியம் நொந்தே பாரத் என சொறிந்து விட்டுக் கொண்டு பின்னர் நொந்ததே பாரத் என மாற்றம் செய்து தன் அரிப்பை தீர்த்துக் கொண்டது. இது ஏன் என்று பார்த்தால்……. அதி வேக வண்டி என்றதும் வந்தே பாரத் என நினைத்து கொண்டு வெள்ளி இரவு சில சமூக ஊடகங்களில் செய்தி வெளியிட்டது. அப்போது அதன் வீரியம் அவர்களுக்கு புரியவில்லை. மறுநாள் சனிக்கிழமை காலை தான் நிலவரம் தெரிய… கலவரம் ஆனார்கள்.திருமதி துர்காவின் தூரத்து உறவினர் என்கிற வகையில் ரத்தினமாக செயல்பட்டு பெயர் வாங்க நினைத்து….. இரண்டு வரி தட்டிவிட… சங்கரம் சுழன்று… ரத்தம் வரும் வரை சமூக வலைத்தள பக்கங்களில் வைத்து விளாசி தள்ளி இருக்கிறார்கள் ….. இதனை ஒட்டி பலரும் விலகி விட்டனர் என்கிறார்கள். அநேகமாக மத்தியானமர் பிரிந்த போதும் இவ்வளவு விசனப்பட்டு இருக்க மாட்டார் போலிருக்கிறது மனிதர்.
போகட்டும் நம் விஷயத்திற்கு வருவோம். இதே போல் வேறோர் சமாச்சாரமும் இருக்கிறது…. நேற்றைய தின ஞாயிற்றுக்கிழமை பஜ(மாற்றியும் படிக்க முடியும்) கூட்டம் ஒன்றில் வைத்து இதே ஒரிசாவில் தான் அன்று அருட்பணி செய்த நமது அன்பு சகோதரர் குடும்பத்தை உயிரோடு வைத்து கொளுத்தியதற்கு தண்டனை தான் இது பேசியிருக்கிறார் மத போதைக்காரர் ஒருவர். எவ்வளவு வன்மம் இருக்கும் பாருங்கள்.
அன்றிலிருந்த #அப்பம் இன்று இல்லை போலிருக்கிறது.
ஒரு பக்கம் இவை என்றால் மறுபக்கம் ஆப்பத்திற்கு பாயா ஹலால் தான் என்கிற அழிச்சாட்டியமும் நடக்கிறது. மறந்தும் கேள்வி கேட்கக்கூடாது தேசியவாதிகள் என்கிறார்கள் இந்த சுயநலவியாதிகள்.
ஒரே ஒரு ஆறுதல்…..
அழிச்சாட்டியம் செய்யவே பிறவி எடுத்தவர்கள் போல் இருப்பவர்கள் ஏனோ நூற்றாண்டு விழா கொண்டாட்ட ஆரம்ப நாளை எந்த ஒரு விழாவும் இன்றி அமைதியாக கடந்து செல்ல அனுமதித்தனர். வெகு நிச்சயமாக இதனை பாராட்டவே வேண்டும். ரயிலுக்கும் இவருக்கும் ஏதோ பூர்வ ஜென்ம ராசி போலிருக்கிறது.
போகட்டும்…. அயராது உழைத்த உத்தமர்களுக்கும்… பரிதவித்து நின்ற உயிர்களுக்கு பாரிப்புடன் தோளோடு தோள் நின்ற இளைய சமுதாயத்தினருக்கு நம் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். உயிர் பிரிந்து நிற்கும் உறவுகளுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்!