காரியாபட்டி: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வேளாண்மை விரிவாக்க சீரமைப்புத் திட்டம் அட்மா திட்டத்தின் மகளிர் குழு கூட்ட அரங்கில் வயல்தின விழா நடைபெற்றது.. பயிற்சியில், காரியாபட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சி.செல்வராணி தலைமை வகித்தார்.
மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் நாச்சியாரம்மாள சிறப்பு விருந்தினாராக கலந்துகொண்டு, வேளாண் அடுக்குத் திட்டம், சுற்றுபுறசூழல் பேணிகாத்தல், மரம் வளர்ப்பு,மண் வளம், நீர் வளம் பாதுகாத்தல், கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் திட்டம் மானிய விலையில் கிடைக்கும் இடு பொருட்கள் தொகுப்பு நிலம், குழு அமைத்தல் பற்றி பேசினார்.
தோட்டக்கலை உதவி இயக்குநர் கார்த்திக் விதைகள், பழ மரக்கன்றுகள்,நுண்ணீர் பாசன திட்டங்கள் பற்றியும், உதவி வேளாண்மை அலுவலர் கருப்பு தேவன் வேளாண் வணிகம் மற்றும் சிறுதானிய உற்பத்தி, சிறுதானிய மதிப்புக்கூட்டல் கருவிகள் பற்றியும், உதவி வேளாண்மை அலுவலர் உமா முனி உழவர் சந்தையில் காய்கறி விற்பனை, காய்கறி விதைகள் வழங்குதல், வேளாண் சந்தைக் குழு அமைத்தல் பற்றியும் வேளாண் ஆலோசகர் இயற்கை விவசாயம், பஞ்சகவ்யா, மீன் அமிலம், மண்புழு உரம், சிறுதானியங்கள் சாகுபடி மற்றும் மதிப்புக்கூட்டல் பற்றியும், நாகராஜன் உதவி வேளாண்மை அலுவலர் நாகராஜன் நடப்பாண்டில் உள்ள வேளாண் திட்டங்கள் பற்றியும், வட்டாரதொழில்நுட்ப மேலாளர் முத்து கருப்பன் தென்னை நாற்றுகள் பராமரிப்பு, தென்னை சாகுபடி பற்றியும் பேசினார்.
விழா ஏற்பாடுகளை காரியாபட்டி உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பெ.கணேஷ் பிரபு ரா.அருண்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.