

ரயில் பயணிகள் பொதுமக்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் மதுரையில் இருந்து ராஜபாளையம் -செங்கோட்டைவழியாக குருவாயூருக்கு நிரந்தர ரயில் விரைவில் இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.மேலும் செங்கோட்டை வழியாக இயங்கும் வேளாங்கண்ணி -எர்ணாகுளம் எர்ணாகுளம் – வேளாங்கண்ணி -எர்ணாகுளம் சிறப்பு ரயில் வாரம் இருமுறை விரைவுவண்டி யாக இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

புனலூர் குருவாயூர் இடையே இயங்கும் தினசரி இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை செங்கோட்டை ராஜபாளையம் வழி மதுரை வரை நீடித்து இயக்க கேரளா எம்.பி பிரேமசந்திரன் கோடிக்குன்னில் சுரேஷ் மற்றும் செங்கோட்டை, ராஜபாளையம், சிவகாசி உட்பட பல்வேறு ரயில் பயணிகள் சங்கங்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர் .தற்போது மதுரை-செங்கோட்டை, செங்கோட்டை-கொல்லம், புனலூர்-குருவாயூர் ஆகிய மூன்று ரயில்களையும் ஒன்றாக இணைத்து ஒரே இரயிலாக குருவாயூர்-மதுரை விரைவு வண்டி இயக்கப்படும் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.இயக்க தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
எர்ணாகுளம் – வேளாங்கண்ணி வாரமிருமுறை விரைவு ரயிலில் வண்டி எண் 16361/16362 என்ற எண் நிரந்தர சேவையாக வாரந்தோறும் திங்கள் மற்றும் சனிக்கிழமைகளிலும் வேளாங்கண்ணியில் இருந்து வாரந்தோறும் ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் இயக்கிட ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

நிரந்தர சேவைகள் இயக்க தேதி விரைவில் அறிவிக்கப்படும் . எர்ணாகுளம் – வேளாங்கண்ணி வாரமிருமுறை சேவையுடன் பாலக்காடு கோவை ஈரோடு சேலம் காட்பாடி சித்தூர் வழியாக கொல்லம் – திருப்பதி வாரமிருமுறை மற்றும் பாலருவி விரைவு ரயிலில் தூத்துக்குடி நீட்டிப்புக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.திருவனந்தபுரம் மதுரை அமிர்தா ரயில் ராமேஸ்வரம் வரை நீடித்தது இயக்கவும் ரயில்வே வாரியம் ஏற்கனவே ஒப்புதல் வழங்கியுள்ளது.
மேலும் மயிலாடுதுறை – திருச்சி & திருச்சி – கரூர் & கரூர் – சேலம் ஆகிய மூன்று ரயில்களை இணைத்து ஒரே ரயிலாக மயிலாடுதுறை – சேலம் இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது..