- Ads -
Home அடடே... அப்படியா? சபரிமலை சீஸனுக்காக – ஸ்பெஷல் வந்தேபாரத், கூடுதல் பஸ்கள்!

சபரிமலை சீஸனுக்காக – ஸ்பெஷல் வந்தேபாரத், கூடுதல் பஸ்கள்!

சபரிமலை சீசன் துவங்க உள்ளநிலையில் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு கூடுதலாக 7 வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை - தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சபரிமலை சீசன் துவங்க உள்ளநிலையில் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு கூடுதலாக 7 வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை – தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சபரிமலை சீசன் மற்றும் பண்டிகை விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க இந்த சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது.

உலகப் புகழ்பெற்ற இந்து வழிபாட்டு ஸ்தலமான சபரிமலையில் 41 நாள் மண்டல பூஜை துவங்க உள்ள நிலையில் சபரிமலை பக்தர்களின் வசதிக்காக தென்னக ரயில்வே சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவையை நவம்பர் 16 இன்று முதல் டிசம்பர் இறுதி வரை இயக்க உள்ளது

இந்த சிறப்பு ரயில் வசதி ஐயப்ப பக்தர்களை பெரும் வரவேற்பு ஏற்படுத்தியுள்ள நிலையில் மேலும் கூடுதல் ரயில்களை மதுரை செங்கோட்டை புனலூர் வழித்தடத்தில் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக செங்கோட்டை சென்னை இடையேயும் கடந்தாண்டு சிறப்பு இயக்கப்பட்ட சிறப்பு ரயிலான எர்ணாகுளம் தாம்பரம் செங்கோட்டை வழி ரயிலை இந்த ஆண்டும் உடன் இயக்க பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றும்பயணிகளின் வசதிக்காக திருநெல்வேலிக்கு கூடுதலாக ஏழு வந்தே பாரத் ரயில் சேவைகளை தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
இதன்படி இன்று நவம்பர் 16, 23, 30, டிசம்பர் 7, 14, 21, 28 ஆகிய நாட்களில் சென்னை – திருநெல்வேலி வந்தே பாரத் சிறப்பு ரயில் (06067) சென்னை எழும்பூரில் இருந்து அதிகாலை 06.00 மணிக்கு புறப்பட்டு மதியம் 02.15 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.

ALSO READ:  சோழவந்தான், அலங்காநல்லூர் பகுதிகளில் விநாயகர் ஊர்வலம்!

மறு மார்க்கத்தில் அதே நாட்களில் திருநெல்வேலி – சென்னை வந்தே பாரத் ரயில் (06068) மாலை 03.00 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும்.

இந்த சிறப்பு ரயில் வழக்கம் போல தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த வந்த சிறப்பு முறையில் ஐயப்ப பக்தர்களின் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

இதே போல் பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து மதுரை செங்கோட்டை வழி கொல்லம் சிறப்பு ரயில் ஒன்று தினசரி ரயில் இயக்கவும் ஏற்கனவே கடந்த ஆண்டு சபரிமலை சீசனுக்கு இயக்கப்பட்ட எர்ணாகுளம் கொல்லம் செங்கோட்டை ராஜபாளையம் தாம்பரம் ரயிலை இந்த ஆண்டு தினசரி ரயிலாக இயக்கவும் இதன்மூலம் ஐயப்ப பக்தர்கள் பெரும்பாலவில் பயனடைவார்கள் எனவும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழ் கடவுள் முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது போல் கேரளாவில் பிரசித்தி பெற்ற ஐயப்பனுக்கும் கேரள தமிழக எல்லைப் பகுதியில் படைவீடு கோவில்கள் உள்ளன.
செங்கோட்டை அருகில் ஐயப்பனின் படை வீடு கோவில்களான அச்சன்கோவில் ஆரியங்காவு குளத்துப்புழா போன்ற கோயில்கள் உள்ளது. இதனால் பக்தர்கள் இங்கு செல்ல வசதியாக சிறப்பு ரயில் இயக்குவது அவசியமாகும்

ALSO READ:  சபரிமலை 18ம் படியில் குரூப் போட்டோ எடுத்த விவகாரம்: போலீசாருக்கு கேரள உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்.

சென்னை எழும்பூரில் இருந்து வரும் 16, 23, 30, டிச., 7, 14, 21, 28ம் தேதிகளில் காலை 6:00 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் சிறப்பு ரயில்கள், அதேநாளில் மதியம் 2:15 மணிக்கு திருநெல்வேலி செல்லும். திருநெல்வேலியில் இருந்து வரும் 16, 23, 30, டிச.,7, 14, 21, 28ம் தேதிகளில் மாலை 3:00 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் சிறப்பு ரயில், அதேநாளில் இரவு 11:15 மணிக்கு எழும்பூர் வந்தடையும். இந்த சிறப்பு ரயில்கள் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகரில் நின்று செல்லும். மேற்கண்ட சிறப்பு ரயில்களில், டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது.

மண்டல பூஜையையொட்டி சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜையையொட்டி நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கேரள மாநிலத்தில் மிகவும் சபரிமலையில் பிரசித்திபெற்ற உள்ள ஐயப்பன் கோயிலுக்கு, ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜை விளக்கு மற்றும் மகர ஆகிய திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இதற்கு தமிழகத்திலிருந்து ஐயப்ப பக்தர்கள் சென்று வர ஏதுவாக முக்கிய நகரங்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் ஆண்டுதோறும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

ALSO READ:  மதுரை மாவட்டத்தில் கன மழை!

இந்நிலையில், இந்த ஆண்டும் நாளை (நவ.16) முதல் ஜன. 16 ம் தேதி வரை சென்னை, திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி, கடலூர் ஆகிய இடங்களிலிருந்து பம்பைக்கு, அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள் மற்றும் குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ள சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

சபரிமலை தேவஸ்தான அறிவிப்பின்படி, டிச.27 முதல் 30ம் தேதி மாலை 5 மணி வரை கோயில் நடை சாத்தப்படுவதால், டிச.26 முதல் 29ம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது. குழுவாக செல்லும் பக்தர்களுக்கு வாடகை அடிப்படையில் பேருந்து வசதி செய்து தரப்படும்.

சிறப்புப் பேருந்துகளை www.tnstc.in என்னும் இணையதளம் மற்றும் TNSTC செயலி வாயிலாக 30 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், விவரங்களுக்கு 94450 14452, 94450 14424, 94450 14463 மற்றும் 94450 14416 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம். – இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version