29 C
Chennai
28/10/2020 7:45 PM

பஞ்சாங்கம் அக்.28 புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் அக்.28ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |
More

  2021 – தமிழக அரசு விடுமுறை தினங்கள்!

  தமிழக அரசு 2021ஆம் ஆண்டு 23 பொது விடுமுறை தினங்களை அறிவித்து உள்ளது… இதன் விவரம்..

  கிஸான் திட்டத்தில் முறைகேடு செஞ்சவங்க… அக்.31க்குள் பணத்த திருப்பிக் கொடுத்துடுங்க!

  அரசின் அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப் படும் என்று மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் எச்சரிக்கை விடுத்து அறிக்கை

  சதுரகிரி மலைக்குச் செல்ல அனுமதி! ஐப்பசி மாத பூஜைகளுக்காக..!

  சதுரகிரிமலைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி…. ஐப்பசி மாத பிரதோஷம், பௌர்ணமி பூஜைகளுக்காக

  கொரோனா வார்டில் அனுமதிக்கப் பட்டிருந்த இளைஞர்… மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

  மதுரையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த மெக்கானிக் அரசு மருத்துவமனையில் மாடியில்

  விஜய் சேதுபதி கிட்ட பேசிட்டேன்… ஆனாலும் மிரட்டுறாங்க.. யாரு என்னன்னே தெரியல..! : சீனுராமசாமி அலறல்!

  விஜய் சேதுபதியிடம் பேசிவிட்டேன், ஆனாலும் எனக்கு மிரட்டல் அதிகம் வந்துகொண்டிருக்கிறது, யார் என்ன என்று தெரியவில்லை, சினிமாவில் உள்ள அரசியலும் எனக்குத் தெரியவில்லை என்று  ‘அப்பாவி’ போல் அலறியுள்ளார்  இயக்குனர் சீனுராமசாமி!

  Source: Vellithirai News

  முதல்வர் ஐயா என் உசுருக்கு ஆபத்துங்க… உதவுங்க! சினி இயக்குனரின் அலறல் ட்வீட்!

  என் உயிருக்கு ஆபத்து உதவுங்க என்று அலறியடித்து டிவீட் ஒன்றை பதிவு செய்திருக்கிறார் சினி இயக்குனர் சீனு ராமசாமி.

  கொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்!

  அவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்

  அடுத்த பாகுபலி..! ஆர்.ஆர்.ஆர். படத்தின் பீம் டீஸர்!

  பிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்.ஆர்.ஆர். ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், Source: Vellithirai News

  கேள்வியும் பதிலும் – பெண்கள் மாதவிலக்கின் போது ஏன் விலக வேண்டும்?

  நெருப்பையும் நீரையும் சமமாகப் பார்க்க முடிந்த, இருமைகளுக்கு அப்பாற்பட்ட அவதூத நிலையில் இருப்பவர்களுக்கே செய்யக் கூடியவை செய்யக் கூடாதவை என்ற விதி, நிஷேதங்கள் இல்லையே தவிர,

  கேள்வியும் பதிலும் – பெண்கள் மாதவிலக்கின் போது ஏன் விலக வேண்டும்?
  தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா.
  தமிழாக்கம் – ராஜி ரகுநாதன்.

  கேள்வி:
  பெண்கள் மாதவிலக்காக இருக்கையில் தனியாக எதையும் தொடாமல் இருக்க வேண்டுமென்கிறார்களே, எதற்காக? அது பெண்களிடம் சகஜமாக நிகழும் மாறுதல் தானே? பின், இவ்வாறு தனியாக வைப்பது ஆரோக்கியத்திற்காகவா? அல்லது தெய்வ சம்பந்தமான தோஷமென்பதால் பெரியோர் இவ்விதம் கூறுகிறீர்களா?

  கோவிலுக்குப் போகக் கூடாது, தெய்வம் தொடர்பான காரியங்களில் ஈடுபடக் கூடாது என்பது எதனால்? உண்மையாகவே அது அவ்வளவு பெரிய தோஷமா? இந்த அதி வேக யுகத்தில் இவ்விதம் வீட்டிற்குள் வராமல் வேறாக இருப்பது கடினமாக உள்ளதே!

  எனவே தயவு செய்து என் சந்தேகத்தைத் தீர்க்கவும். தெய்வம் எங்கும் நிறைந்தவர் அல்லவா? பின், வேறாக இருப்பது போன்ற ‘அசௌசங்களை’ எதற்காக கடைபிடிக்க வேண்டும்? வேதத்தில் இதற்கு ஆதாரம் உள்ளதா? இது அநாகரிகம் அல்லவா? விவரிக்கவும்.

  பதில்:
  இது விஷயமாக அநேகம் பேர் அநேக விதமாகக் கேள்வி கேட்கின்றனர். இதற்கு விடையளிக்க முயற்சிக்கிறேன்.

  மனிதனின் இக, பர சௌக்கியத்திற்காக சூட்சும விஷய தரிசனம் செய்த சாஸ்திரங்கள் அவதரித்தன. அவை வேதத்தை ஆதாரமாகக் கொண்டுள்ளன. வேதங்கள் ‘அபௌருஷேயங்கள்’. மனிதனால் படைக்கப்பட்டவை அல்ல. தோஷமோ களங்கமோ சந்தேகமோ அற்றவை. அவை மனிதனின் சுக மய வாழ்க்கைக்காக சில ஆசாரங்களை, நியமங்களை உபதேசித்துள்ளன. அவற்றைக் கடைபிடிப்பது ஒவ்வொரு வைதீகனின் (வேதத்தை நம்புபவன்) கடமையாகும்.

  மடி, விழுப்பு, தீட்டு என்ற சொற்களை நாம் கேட்டு வருகிறோம். அவை சுத்தம் பற்றி மட்டுமே நமக்கு எடுத்துக் கூறுவதாக நினைப்பது தவறு. அவற்றின் பின்னால் நமக்கு கண்ணுக்குப் புலப்படாத, ஆனால் நம் வாழ்க்கையின் மேல் பிரபாவம் காட்டக் கூடிய சூட்சும சக்திகளை பற்றிய வேத ஞானம் உள்ளது. இதனையே ‘பரிஞானம்’ என்கிறோம்.

  samavedam pic

  பிறப்பு இறப்பு அசௌச்சங்களில் நாம் உடலாலும் மனதாலும் சுத்தமாக இருந்தாலும், ‘தீட்டு’ என்ற பழக்கம் உலகத்தில் உள்ளது. எனவே வேதம் எவ்விதம் கூறியதோ அதையே கடைபிடிக்க வேண்டும். நம் யுக்திகளுக்கோ, மாற்றங்களுக்கோ வைதீக ஆசாரத்தில் இடமில்லை.

  ஸ்த்ரீகள் ஒவ்வொரு மாதமும் ருது காலத்தில் தனியாக இருப்பது என்பது நம் பூர்வீகர்களின் ஆசாரம். இதற்கு ஆதாரம் யஜுர் வேதத்தில் இரண்டாவது காண்டத்தில் ஐந்தாவது ப்ரபாடகம். அதில் விஸ்வரூப வதை, மாதவிலக்கு (ரஜஸ்வலா) விரதங்கள் முக்கியமாக கூறப்பட்டுள்ளன.
  அது இவ்விதம் உள்ளது:-

  “பூர்வம், பிரகஸ்பதி தவத்திற்குச் சென்ற போது இந்திரன், த்வஷ்டையின் குமாரனான விஸ்வரூபனை குருவாக ஏற்றான். அவனுக்கு ‘த்ரிசிரஸ்’ என்றும் பெயர் உண்டு. அவனுக்கு மூன்று தலைகள். அவற்றால் அவன் சோம பானம், சுர பானம், அன்ன போஜனம் செய்வான்.

  ஒரு முறை தனக்கு கிடைத்த யாக பாகமான ஹவிஸ்ஸை விஸ்வரூபன் அசுரர்களுக்கு கொடுத்ததால் கோபமடைந்த இந்திரன், வஜ்ராயுததால் அவனுடைய தலைகளை வெட்டி விட்டான். அவை பறவைகளாக மாறி பிரம்மஹத்தி தோஷத்தை எடுத்துக் கொண்டு இந்திரனுக்கு அந்த தோஷத்தைக் கொடுக்கத் தொடங்கின. அதனால் இந்திரனின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டது.

  யக்யம் மூலம் கொஞ்சம் பாவத்தைப் போக்கி, மீதியிருந்த தோஷத்தை மூன்று பாகம் செய்து, ஏற்றுக் கொள்பவருக்கு கேட்ட வரத்தை அளிப்பதாகக் கூறினான். ஒரு பாகத்தை பூமி ஏற்றுக் கொண்டது. வரமாக, பூமி மீது எங்காவது தோண்டினால் சில நாட்களிலேயே அந்த இடம் சமமாக ஆக வேண்டும் என்று வேண்டியது. அந்த வரத்தை அளித்தான் இந்திரன்.

  விருட்சங்கள் ஒரு பாகத்தை ஏற்றுக் கொண்டன. சில கிளைகளை வெட்டினாலும் மரம் சாகாமல் மீண்டும் வேறு கிளைகள் முளைக்கும்படி வரம் கோரிப் பெற்றன.

  அதே போல் ஸ்த்ரீகள் இறுதி பாக தோஷத்தை ஏற்று, அதற்கு பதிலாக, பிள்ளை பெறும் சாமர்த்தியத்தை வரமாகப் பெற்றனர். அதனால் மாதவிலக்கு காலத்தில் அவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் இருக்கும். அந்த தோஷம் இருப்பதால், அந்த நாட்களில் அவர்களுடன் சல்லாபங்கள் செய்யக் கூடாது. சமமாக அமரக் கூடாது. சேர்ந்து சாப்பிடக் கூடாது. அவர்களைத் தொடக் கூடாது. அவர்கள் சமைத்ததை உண்ணக் கூடாது. அவ்வாறு நியமங்களை கடை பிடிக்காத பட்சத்தில், சில கஷ்டங்கள் வந்து சேரும் என்று கூட வேத மந்திரங்கள் கூறுகின்றன. இது வேதம் அளிக்கும் ஆதாரம்.

  மேலும், இதில் எத்தனையோ குறியீடுகள்/சங்கேதங்கள் உள்ளன. சரீர நிர்மாணத்தில் தேவதா சக்திகளே புலன்களுக்கு அதி தேவதைகள். நம் உடலில் நமக்குத் தெரியாத மாற்றங்கள் நிகழுவதை போலவே, நம் மீது பிரபாவம் செய்யும் சூட்சும பிரபஞ்சத்திலும் மாற்றம் நிகழ்கிறது. இந்திரன் பிரதானமான தேவதா சக்தி.

  ஆச்சர்யமாக, கால நகர்வை ஆதாரமாகக் கொண்டு மாற்றம் பெறும் தேக நியமத்தில் கண்ணுக்குப் புலப்படாத எல்லையற்ற தெய்வீக ரகசியங்களை வேதம் விவரிக்கிது. இந்திரியங்களுக்கு அதீதமான சத்திய தரிசனமே அல்லவா, வேத விஞ்ஞானம்?
  சில தர்மங்களை நம்மால் கடைப்பிடிக்க இயலாமல் போகலாம். ஆனால் நாம் சக்தியின்றி விட்டு விட்டு அவற்றை தர்மங்கள் அல்லவென்றும், நாம் செய்வது தான் தர்மம் என்றும் கூறி ரிஷிகள் அளித்த விஞ்ஞானத்தை எதற்காக ஏளனம் செய்ய வேண்டும்?

  நவீன காலத்தில் அவற்றைக் கடைபிடிப்பது சிரமம் என்றும், அவை மூட நம்பிக்கைகள் என்றும் பெண்களைக் குறைத்து மதிப்பிடுவதாகவும் எண்ணுகிறார்கள். ஆனால் அது சரியல்ல.

  இது வைதீக ஆச்சாரமே. நம் பூர்வீகர்கள் கடை பிடித்து வந்த தர்மமே. நமக்குத் பிடிக்கவில்லையாதலால் அவற்றை மூட நம்பிக்கைகள் என்று கூறுவது சரியல்ல.பெண்கள் இந்திரனுக்கு உதவி செய்து, தோஷத்தைத் தாங்கள் எடுத்துக் கொண்டு அனுபவித்து வருகிறார்கள் என்று அவர்களின் சிறப்பைக் குறிப்பிடுவதால், அவர்களைக் குறைத்து மதிப்பிடுவதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.

  மேலும், இது உடலின் தீட்டாகிய தோஷம். தனி மனித தோஷம் அல்ல. இது அவமானமானதுமல்ல. தேச, கால, நிலைமைகளைக் கொண்டு சில விஷயங்கள் அனுகூலமாக இல்லாவிடினும், வஞ்சனையின்றி, முடிந்தவரை கடைபிடிக்க வேண்டும். வீட்டில் மற்றவர்களைத் தொடாமல், சமைக்காமல், ஓய்வாக ஒரே இடத்தில் இருப்பது என்பது நடவாத காரியம் அல்ல. சிரத்தை இருந்தால் நிச்சயம் கடைபிடிக்க முடியும், மாதத்தில் ஒரு சில நாட்கள் ஜாக்கிரதையாக இருப்பது சிரமமே ஆனாலும் அசாத்தியமல்ல. வெளி உலகத்தைப் பற்றிய கவலையை விடுங்கள். நம் வீட்டைப் பொறுத்தவரை நாம் கவனமாக இருப்போம்.

  நான்காவது நாள் குளித்த பின், நீரில் மஞ்சள் கலந்து அந்த தோஷம் போகும் விதமாக ஸ்நானம் செய்வர். வீட்டில் அந்த மூன்று நாட்களும் நடந்த, பயன்படுத்திய இடங்களை எல்லாம் மஞ்சள் நீர் தெளித்து வீட்டை அலம்புவர். மேலும் மந்திரங்கள் தெரிந்தவர் இருக்கும் வீட்டில், தீபாராதனை, விளக்கேற்றுதல், தெய்வ பூஜைகள் நடைபெறும் வீடுகளில் இது போன்ற தீட்டுகள் கலந்தால், அந்த மந்திர சக்தி, தெய்வ சக்தி அழிகிறது.

  இதற்கு எத்தனையோ நிதரிசனங்கள் உள்ளன. தாயத்துகள், யந்திரங்கள் போன்றவை கூட தீட்டான பெண் தொடுவதால் சக்தியை இழக்கின்றன. மீண்டும் ஸம்ப்ரோக்ஷணை செய்தாலொழிய அவற்றில் சக்தி சேராது.

  ‘எங்கும் இறைவன் உள்ளான் அல்லவா?’ என்ற வேதாந்த வசனத்தை இந்த இடத்தில் சேர்த்துக் கொள்வது சரியல்ல. எங்கும் இறைவன் உள்ளான் என்று தோன்றினால், ஒரே இடத்தில் தெய்வ பூஜை செய்வது எதற்காக? தேக நினைவு இருக்கும் வரை ஆசாரம் கடைபிடிக்க வேண்டியதே.

  இம்மாதிரி அசௌசம் உள்ள பெண் உடம்பிலிருந்து வெளியே பரவும் சூட்சும, மின்சார, காந்த அலைகளின் ஆவரணம் (Auro) தெய்வீகமாக இருக்காது. விபரீத சக்தியோடு கூடியதாய் இருக்கும். அது சூட்சும உலகை தரிசிக்கும் சக்தி கொண்டவருக்குத் தெரியும்.

  தினமும் தீட்சையாக இருக்கும் பெண்கள், அந்த நான்கு நாட்கள் மந்திர ஜபம், ஸ்தோத்திர பாராயணம், தீபம் ஏற்றுதல் போன்றவற்றைச் செய்யக் கூடாது. மானசீகமாக நாம ஸ்மரனை செய்தால் தவறல்ல. மீண்டும் ஸ்நானங்கள் செய்த பிறகு ஐந்தாம் நாள் முதல் அவற்றைத் தொடரலாம். அப்போது நடுவில் நிறுத்திய தோஷம் இருக்காது.

  அவ்விதமில்லாமல் அந்த நாட்களில் கூட அவற்றைத் தொடர்ந்தால், பாபம் பீடிக்கும். அச்சமயத்தில் தெய்வம் தொடர்பான காரியங்களில் கலந்து கொண்டாலும் தோஷமே. சாதாரணமாக, தினமும் சகஜமாக மலினங்களை /அழுக்குகளை நீக்கியபின், ஸ்நானம் செய்தால்தான் பூஜைகள் செய்ய இயலும் என்று கூறுகிறார்கள் அல்லவா? அப்படியிருக்க, இந்த விஷயத்தில் நியமங்கள் இருப்பது எத்தனை தேவை என்பதை ஆலோசியுங்கள்.

  ஆலயங்களின் சூழல் முழுவதும் மந்திர சக்தியாலும் நித்திய அனுஷ்டானங்களாலும் புனிதமாக இருக்கும். அதில் இது போன்ற அசௌசமுள்ளவர்கள் பிரவேசித்தால், அந்தச் சூழலின் சூட்சுமமான பவித்திர நிலையில் இழப்பு ஏற்படுகிறது.
  நம் தேவதைகளை பற்றியும், மந்திரங்களை பற்றியும் கூறிய வேத, புராணங்கள் இந்த விஷயங்களையும் கூறியுள்ளன. தெய்வங்களின் மேல் நம்பிக்கை இருந்தால் இவற்றையும் நம்ப வேண்டியதே.

  ‘சுசி’, சுத்தம் என்பது அபிவிருத்தியடைந்த நாகரீகத்திற்குச் சின்னம். ஆயின், நமக்கு ஒரு சந்தேகம் வரலாம். வெளியில் எத்தனையோ பேர் அவ்வாறு இருக்கிறார்கள் அல்லவா? என்று. வெளி விஷயம் நமக்கு முக்கியம் அல்ல. நம் வரையில் நாம் கவனமாக இருந்தால் போதும்.

  அதனால் தான் கடவுள் அலமாரி அல்லது கடவுள் அறையை தனியாக, பிரத்தியேகமாக அமைக்கிறோம். வெளியில் போய் வந்த உடையுடன் தொட மாட்டோம். ஸ்நானம் செய்து, சுத்தமான உடையணிந்து, சுத்த ஜலத்தை எடுத்துக் கொண்டு, புண்டரீகாக்ஷா ‘ என்று இறைவனின் நாமத்தை ஜபிப்போம். அப்போது ‘சுசி’, சுத்தம் ஏற்படுகிறது. தெரிந்தும் அது போன்றவற்றைக் கலக்கக் கூடாது. அப்படிப்பட்ட தீட்டு ஸ்த்ரீயில் இருக்கும் போது, அந்த சுற்றுவட்டாரத்தில் உள்ள இடமெல்லாம் ‘அசுசி’ ஏற்பட்டு அசுத்தமாகிறது.

  ஆரோக்கியத்தின்படி பார்த்தால் கூட, அந்த நான்கு நாட்களும் பெண்களுக்கு ஓய்வு தேவை. அப்போதுகூட அவளுக்கு ஓய்வு கொடுக்காமல் அவளை வீட்டு வேலைகளை செய்யச் செய்வது ஆண்களின் முரட்டுத்தனம். அப்போதைய தீட்டுக்கால இன்பெக்ஷன் பிரபாவம் பற்றி விஞ்ஞான சாஸ்திரம் கூட எடுத்துக் கூறியுள்ளது.
  பாரதீய விஞ்ஞானத்தில் பௌதீக விஞ்ஞானம், சூட்சும பிரபஞ்சம் பற்றிய விஞ்ஞானம் இரண்டும் சேர்ந்தே இருக்கும்.

  உலகில் பௌதீக விஞ்ஞானம் இப்போது தான் வளர்ந்து வருகிறது. இப்போது நம் ஆசாரங்களில் உள்ள சில ஆரோக்கிய ரகசியங்களை அங்கீகரித்து வருகிறார்கள். இன்னும் இந்த சயின்ஸ் வளர்ந்தால், அனைத்தையும் அங்கீகரிப்பார்கள். ஆனால் அதற்குள், நாம் அவற்றை இழக்கக் கூடாது. அந்த நான்கு நாட்களும் பெண்கள் வீட்டில் கலக்கக் கூடாது. வீட்டு எஜமானரோ, மற்றவரோ தீபம் ஏற்றி, பூஜை செய்யலாம்.

  நம்மைச் சுற்றியுள்ள உலகில் தெய்வீக சக்திகளும் உள்ளன. விபரித சக்திகளும் உள்ளன. விபரீத சக்திகளின் பிரபாவம் நம் மீது படாமல் இருப்பதற்காக சௌசத்தை/சுத்தத்தைக் கடைபிடிக்க வேண்டும்.

  ‘இவை இயலாதவை’ என்று தப்பித்துக் கொண்டால் நஷ்டமடைவது நாமே. அந்த நஷ்டத்திற்குத் தயாராக இருந்தால் விட்டு விடலாம். சாஸ்திரத்தைக் கடைபிடிப்பதால், கடைபிடிப்பவருக்கே பிரயோஜனமே தவிர, வேறு யாருக்கோ அல்ல.

  நம் நலனுக்காகவே சூட்சும தரிசனம் பெற்ற ரிஷிகள், சதாச்சார/நல்லொழுக்க நியமங்களைக் குறிப்பிட்டுள்ளார்கள். அவற்றைக் கடைபிடிப்பது சிலருக்கு கஷ்டமாக இருக்கலாம். அதற்காக அவற்றை விட்டொழிப்பது தவறல்லவா?

  நெருப்பையும் நீரையும் சமமாகப் பார்க்க முடிந்த, இருமைகளுக்கு அப்பாற்பட்ட அவதூத நிலையில் இருப்பவர்களுக்கே செய்யக் கூடியவை செய்யக் கூடாதவை என்ற விதி, நிஷேதங்கள் இல்லையே தவிர, நெருப்பு, நீர், நல்லது, கெட்டது, சுகம், துக்கம் தெரியக் கூடிய உடல் நினைவு உள்ள நம்மனைவருக்கும் விதி, நிஷேதங்கள் உண்டு.

  உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

  Latest Posts

  2021 – தமிழக அரசு விடுமுறை தினங்கள்!

  தமிழக அரசு 2021ஆம் ஆண்டு 23 பொது விடுமுறை தினங்களை அறிவித்து உள்ளது… இதன் விவரம்..

  மனு ஸ்மிருதியா, மார்க்ஸ் ஸ்மிருதியா? (பகுதி – 1)

  வேண்டுமென்றே பொய்யான தகவல் களுடன் (உண்மை போன்ற தோற்றத்துடன்) வெளியிடப்படும் நூல்கள் உள்ளன

  திருமாவைப் போல் விலை போகாமல்… இவர்கள் காத்திருக்கிறார்கள்!

  ஹரிஜனத் துறவியும் சிதம்பரம் தொகுதி முன்னாள் MLA-வுமான சுவாமி சகஜானந்தர் போன்ற உத்தமசீலர்கள்

  பெரியார் தேடிய முட்டாள்கள்: சோவின் தீர்க்க தரிசனம்!

  எனக்கு முட்டாள்கள் தான் தேவை என்று பெரியாரே சொல்லிவிட்டார்! பெரியார் தேடிய முட்டாள்கள் இவர்கள்!
  Dhinasari Jothidam adDhinasari Jothidam ad

  சமூகத் தளங்களில் தொடர்க:

  18,009FansLike
  257FollowersFollow
  15FollowersFollow
  72FollowersFollow
  957FollowersFollow
  17,300SubscribersSubscribe

  2021 – தமிழக அரசு விடுமுறை தினங்கள்!

  தமிழக அரசு 2021ஆம் ஆண்டு 23 பொது விடுமுறை தினங்களை அறிவித்து உள்ளது… இதன் விவரம்..

  கிஸான் திட்டத்தில் முறைகேடு செஞ்சவங்க… அக்.31க்குள் பணத்த திருப்பிக் கொடுத்துடுங்க!

  அரசின் அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப் படும் என்று மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் எச்சரிக்கை விடுத்து அறிக்கை

  சதுரகிரி மலைக்குச் செல்ல அனுமதி! ஐப்பசி மாத பூஜைகளுக்காக..!

  சதுரகிரிமலைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி…. ஐப்பசி மாத பிரதோஷம், பௌர்ணமி பூஜைகளுக்காக

  சதுரகிரி மலைக்குச் செல்ல அனுமதி! ஐப்பசி மாத பூஜைகளுக்காக..!

  சதுரகிரிமலைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி…. ஐப்பசி மாத பிரதோஷம், பௌர்ணமி பூஜைகளுக்காக

  வரலாற்றில் முதல் முறையாக… பக்தர்கள் இன்றி… குலசை சூரசம்ஹாரம்!

  முதன்முறையாக பக்தர்கள் இன்றி சூரசம்ஹாரம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

  நவராத்திரி நிறைவு விழா: அம்பு எய்தல் நிகழ்ச்சி!

  சோழவந்தான் தென்கரை விக்கிரமங்கலம் தேனூர் திருவளவயநல்லூர் திருவேடகம் ஆகிய கிராமங்களில் நவராத்திரி

  திருமாவைப் போல் விலை போகாமல்… இவர்கள் காத்திருக்கிறார்கள்!

  ஹரிஜனத் துறவியும் சிதம்பரம் தொகுதி முன்னாள் MLA-வுமான சுவாமி சகஜானந்தர் போன்ற உத்தமசீலர்கள்

  பெரியார் தேடிய முட்டாள்கள்: சோவின் தீர்க்க தரிசனம்!

  எனக்கு முட்டாள்கள் தான் தேவை என்று பெரியாரே சொல்லிவிட்டார்! பெரியார் தேடிய முட்டாள்கள் இவர்கள்!

  ரெண்டு மோசடி… மூணு துரோகம்: திருமா சர்ச்சைப் பேச்சின் பின்னணி!

  இந்த மூன்று கேள்விகளுக்கும் நேர்மையாக பதிலளிக்க ஏதாவது ஒரு திராவிடக் குஞ்சோ, சிறுத்தைக் குட்டியோ தயாரா?
  Translate »