- Ads -
Home அடடே... அப்படியா? உதகையில் அண்ணாமலை ஆர்ப்பாட்டம்!

உதகையில் அண்ணாமலை ஆர்ப்பாட்டம்!

நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் கோஷங்களை எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

காவல்துறையினரின் அராஜகத்தை கண்டித்து எல். முருகன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இருவரும் ஊட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் உதகையில் இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பாஜக மற்றும் அதிமுக இரு கட்சிகளும் இன்று ஊட்டியில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.இரு கட்சியினரும் உதகை காபி ஹவுஸ் சந்திப்பில் இருந்து ஊர்வலமாக செல்ல தயாராக ஒரே பகுதியில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாஜகவினருக்கு 10 மணியும் அதிமுகவினருக்கு 11 மணியம் நேரம் ஒதுக்கப்பட்டது. பாஜகவினர் வேட்பு மனு தாக்கல் செய்ய கிளம்ப தாமதமானதால் அதிமுகவினர் தாங்கள் முன்னே செல்வதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.இரு கட்சியினரும் மாறி மாறி கோஷமிட்டனர்.

ALSO READ:  ஆட்சியின் அவலத்தைச் சரி செய்யாமல், அப்பாவி மக்களைத் துரத்துவது ஏன்?

பின்னர் நீலகிரி தொகுதி வேட்பாளர் எல் முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இருவரும் வந்த பின்பு ஊர்வலம் தாமதமாக தொடங்கியது.

இதனால் ஆத்திரமடைந்த அதிமுகவினர் காவல் துறையோடு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாகனத்தை தாக்கம் முயன்ற அதிமுகவினரை காவல்துறை கட்டுப்படுத்தியது தொடர்ந்து பாஜகவினரை வேகமாக செல்ல அறிவுறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னர் நீலகிரி பாஜக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து காவல்துறையினரின் அராஜகத்தை கண்டித்து எல். முருகன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் கோஷங்களை எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version