ராகுலிடம் என்ன சொன்னார் சிருங்கேரி சுவாமிகள்..?

உஷ்... தன்னிடம் ஆசி வாங்க வந்த ராகுல் மற்றும் சித்தராமையாவுக்கு - சிருங்கேரி சாரதா பீட சங்கராச்சார்யாரின் ஆசியுரை என்ன தெரியுமா? எம்மை சந்திக்க இந்த மடத்திற்கு வந்ததற்கு மகிழ்ச்சி அடைகிறோம். தாங்கள் ஆற்றும் பணிக்கு நமது ஆசிகளை வழங்கும் நிலையில் இல்லை... என்பதுதானாம்..! 

உஷ்… தன்னிடம் ஆசி வாங்க வந்த ராகுல் மற்றும் சித்தராமையாவுக்கு – சிருங்கேரி சாரதா பீட சங்கராச்சார்யாரின் ஆசியுரை என்ன தெரியுமா?

எம்மை சந்திக்க இந்த மடத்திற்கு வந்ததற்கு மகிழ்ச்சி அடைகிறோம். தாங்கள் ஆற்றும் பணிக்கு நமது ஆசிகளை வழங்கும் நிலையில் இல்லை… என்பதுதானாம்..!

ஹிந்துக்களை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலோ, ஹிந்து மதத்தை பிடிிக்கவில்லை என்றாலோ நீங்கள் அவற்றிலிருந்து விலகியிருப்பது சாலச் சிறந்தது. ஹிந்துக்களை பிளவுபடுத்தி, அவர்களுக்குள் வெறுப்புணர்வை அதிகரிக்கச் செய்யும் செயல்களை செய்யாதீர்கள்.

ஹிந்து மடங்களிலும், கோயில்களிலும் மக்கள் செலுத்துகின்ற காணிக்கைகளை ஹிந்து ஆலயங்களின் முன்னே்றத்திற்கும், தர்மம் செழிக்கவுமே பயன்படுத்த வேண்டும். வேற்று மதத்தினரின் நம்பிக்கைக்காகவோ, நலன்களுக்காகவோ அதை பயன்படுத்துவதை இந்த பீடம் அங்கீகரிக்காது… என்றாராம்!

இந்த விஷயம் வெளியே வரக் கூடாது என்று சித்தராமையா முயற்சி செய்ததாகவும், கர்நாடக ஊடகத்தைச் சேர்ந்த ஒருவர், மடத்தில் உள்ளவர்களிடம் பேச்சுக் கொடுத்து, மேற்கண்ட தகவல்களைப் பெற்று அதை வெளிப்படுத்தியதாகவும், சமூக வலைத்தளங்களில் தகவல்கள் உலா வருகின்றன. மடத்தில் இருந்தவர்கள் ஸ்வாமிகளின் கோபமான வார்த்தைகளைப் பார்த்து விக்கித்துப் போய், வெளியே சொல்லிவிட்டனர் என்று இந்தத் தகவல் பரப்பப் படுகிறது.

உண்மையில் சுவாமிகள் அனைவருக்கும் ஒன்று போலவே ஆசிகளை வழங்குவார். ஆனால் பேச்சு வாக்கில் சில விஷயங்களை அவர் வேண்டுகோளாகச் சொல்லியிருக்கலாமே தவிர அரசியல் ரீதியான பேச்சுகளை அவர் என்றுமே விரும்பியதில்லை என்று மடத்தின் தீவிர விசுவாசிகள் கூறிக்கொண்டிருக்கின்றனர்.

அடடே அப்படியா?

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...