தாம்பரத்திலிருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு, செங்கோட்டை வழியாக அமைக்கப்பட்டுள்ள புதிய அகல
ரயில் பாதையில் தொடர் வண்டி சேவை தொடக்கம். இரு மாநில மக்களும் சிறப்பான வரவேற்பு
தமிழக கேரளா எல்லையான நெல்லை மாவட்டம் செங்கோட்டை வழியாக கேரள மாநிலத்திற்கு பல்வேறு ரயில்கள் மீட்டர் கேஜ் பாதையில் இயக்கப்பட்டு வந்தன. இந்த மீட்டாகேஜ் வழித்தடத்தை 2010ஆம் ஆண்டு அகலரயில் பாதையாக மாற்றிட சுமார் 350 கோடி ரூபாய் செலவில் பணிகள் 8 ஆண்டுகாலமாக நடைபெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிந்தது. இதனைத்தொடர்ந்து இந்த தடத்தில் ரயிலை விரைவில் இயக்க வேண்டும் என்று இரு மாநில மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர் இந்நிலையில் வண்டி எண்: 06027, தாம்பரம் – கொல்லம் சிறப்பு ரயில் நேற்று தாம்பரத்திலிருந்து மாலை 05.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இன்று காலை 05.55க்கு செங்கோட்டை வந்தது. இந்த ரயில் கொல்லத்திற்கு காலை 10.30 மணிக்கு போய் சேரும். வண்டி எண்: 06028, கொல்லம் – தாம்பரம் சிறப்பு ரயில் இன்று, கொல்லத்திலிருந்து மதியம் 01.00 மணிக்கு புறப்பட்டு, அன்று மாலை 05.55 மணிக்கு செங்கோட்டைக்கு வந்து பின்னர் சென்னை தாம்பரத்திற்கு செல்கிறது.
இன்று காலை தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு வந்த ரயிலுக்கு கொல்லம், மாவேலிக்கரை பாராளுமன்ற உறுப்பினர்கள் கொடிக்குன்னில் சுரேஷ் பிரேமசந்திரன், ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டு கொல்லம் புறப்பட்டது. அதனை இரண்டு எம்பிக்களும் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில இரு மாநில மக்களும் கலந்து கொண்டு சிறப்பான வரவேற்பு அளித்தனர் கேரளா அரசியல் வாதிகள் கட்சி பாகுபாடின்றி வந்திருந்தாலும் ,தமிழ் நாட்டில் இருந்து அமைச்சர்,பாராளுமன்ற உறுப்பினர் ,சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கூட கலந்து கொள்ளாதது மக்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்ப்படுதியுள்ளது எட்டு ஆண்டுகள் கழித்து துவங்கியிருக்கும் இந்த விழாவிற்கு எட்டிப் பார்க்காத இவர்களா ? நமக்கு காவேரி நீரை பெற்றுத் தரப் போகிறார்கள்
ரயில்சேவை எட்டிப்பார்க்காத தமிழக அரசியல்வாதிகள்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari