ஹைதராபாத்: என்னை திரைப்பட கலைஞர்கள் சங்கத்தில் இருந்து (எம்.ஏ.ஏ) நீக்கினாலும், அதற்காக பயப்படமாட்டேன். நடிகைகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன் என்று கூறியுள்ளார் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி.
கடந்த சனிக்கிழமை தெலுகு ஃபில்ம் சேம்பர் ஆஃப் காமர்ஸ் கட்டத்தின் வெளியே, திடீரென தனது ஆடைகளைக் களைந்து விட்டு, அரை நிர்வாணமாக நின்று ஊடகங்களுக்கு பேட்டி அளித்த ஸ்ரீரெட்டி, ஊடகங்கள் வழியே நாட்டின் கவனத்தைத் தன் பக்கம் கவர்ந்துவிட்டார்.
அவரது செயலால் கோபமடைந்த திரைப்பட கலைஞர்கள் சங்கம், அவரை சங்கத்தில் இருந்து நீக்கியது. சங்கத்தின் தலைவர் சிவாஜி ராஜா இது குறித்து கூறியபோது, இந்த நடவடிக்கை மட்டுமல்ல, அவர் உடன் யார் நடித்தாலும் அவர்கள் மீதும் நடவடிக்கை பாயும் என்று மிரட்டல் விடுத்துள்ளார். ஸ்ரீரெட்டி திரைப்படங்களில் நடிப்பதை தடை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது சங்கம்.
இதனிடையே, பிரபல தயாரிப்பாளரின் மகன் தன்னை மிரட்டி பாலியல் உறவு கொண்டார் என்று புகார் தெரிவித்த ஸ்ரீரெட்டி, முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் குறித்து தகவல்களை தொடர்ந்து வெளியிடுவேன் என்றும் கூறியிருக்கிறார். இதனால் தெலுங்கு திரையுலகம் பரபரப்பாகியுள்ளது.
மேலும், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என்னை நிர்வாணமாக வீடியோ சாட் செய்யச் சொன்னார்கள், புகைப்படம் அனுப்பச் சொன்னார்கள். நானும் செய்தேன் என்கிறார் ஸ்ரீ ரெட்டி.
இப்போது ஸ்ரீலீக்ஸ் என்பது பிரபலமாகிவிட்டது. தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பதை எதிர்த்து குரல் கொடுத்து வரும் நடிகை ஸ்ரீ ரெட்டியின் ஸ்ரீ லீக்ஸ், பிரபலங்களின் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செக்ஸ் வைத்துக் கொள்ள ஸ்டுடியோக்கள் தான் பாதுகாப்பான இடங்கள். பெரிய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், ஹீரோக்கள் ஸ்டுடியோக்களை இதற்காக பயன்படுத்துகிறார்கள். ஸ்டுடியோக்களுக்குள் யாரும் வர மாட்டார்கள் என்பதால் அது பாதுகாப்பான இடம். மேலும் போலீசாரும் சோதனை செய்ய மாட்டார்கள். அரசும் இதை கண்டுகொள்ளாது.
வட நாட்டில் இருந்து வரும் நடிகைகள் அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்வதால் தெலுங்கு பேசும் நடிகைகளுக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைப்பதில்லை. ஏனென்றால் தெலுங்கு பேசும் பெண்கள் அட்ஜஸ்ட் செய்வதில்லை.
இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுடன் எனக்கு நிறைய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அவர்கள் என்னை நிர்வாணமாக வீடியோ சாட் செய்யச் சொன்னார்கள், புகைப்படம் அனுப்பச் சொன்னார்கள். நானும் செய்தேன். அதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது என்றார் ஸ்ரீரெட்டி.
இதனிடையே ஸ்ரீரெட்டியின் வீட்டு உரிமையாளர், அவரை வீட்டை காலி செய்யச் சொன்னதாகவும், ஒரு ஐஏஎஸ் ஆக இருந்து கொண்டு, குறுகிய மனம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்றும் பெரிய மனிதர்களின் விளையாட்டு ஆரம்பமாகிவிட்டது என்றும் பொரிந்து தள்ளியிருக்கிறார் ஸ்ரீரெட்டி தனது முகநூல் பக்கத்தில். .
அதில் ஒரு நபரின் கருத்து, பலரது கவனத்தைப் பெற்றது. நீங்க மிகச் சிறந்த போராளி. எங்களுக்கு போராளிகள் தேவை. உடனே இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டு, ஆந்திரா பக்கம் வாங்க. ஆந்திரப் பிரதேசத்தில் தேவை இருக்கிறது… என்று கருத்திட்டு நக்கல் அடித்திருக்கிறார். ஸ்ரீலீக்ஸ் இப்போது ஆந்திர தெலங்கானா மாநிலங்களில் பரபரப்பு கிளப்பியிருக்கிறது.