கலர் கலரா ரீல் விடும் அரசியல் கட்சிகளை கேலி செய்வது போல், ஆர்.ஜே பாலாஜி கலர் கலர் கொடி போட்டு தானும் அரசியலுக்கு வருவது போல் சுவர் விளம்பரம் செய்துள்ளார் என்று கூறப் படுகிறது. இதை அடுத்து அரசியலுக்கு வருகிறாரா ஆர்ஜே பாலாஜி என்ற கேள்வி எழுந்துள்ளது.
நடிகரும், ரேடியோ தொகுப்பாளருமான ஆர்ஜே பாலாஜி அரசியலுக்கு வருவது போன்ற சுவர் விளம்பர புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் அரசியலுக்கு வருவதை வரவேற்கும் வகையில் எழுதப்பட்ட ஒரு சுவர் விளம்பரம் தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதில், மே 18ஆம் தேதி எனக் குறிப்பிடப்பட்டு, இளைஞர்களை வழிநடத்த தமிழகத்தில் மாற்றம் காண அரசியல் களம் புகும் ஆர்.ஜே. பாலாஜி அவர்களை வருக, வருக என வரவேற்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது
மேலும், கருப்பு, பச்சை, சிவப்பு, வெள்ளை, மஞ்சள் ஆகிய நிறங்களைக் கொண்ட கொடியும் வடிவமைக்கப்பட்டு, கொடியின் நடுவில் பசுவின் படம் வரையப் பட்டுள்ளது. ஆனால், இந்த விளம்பரம் எப்போது எழுதப்பட்டது என்பது குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை.
சமூக வலைத்தளங்களிலேயே கட்சி தொடங்கி, அதிலேயே போட்டியிடும் காலமும் வந்துவிடும் போலிருக்கிறது!
இநà¯à®¤ அதிகபà¯à®°à®¸à®™à¯à®•ி அடகà¯à®•ி வாஸிதà¯à®¤à®¾à®²à¯ நலà¯à®²à®¤à¯.
à®à®°à¯ வின௠வானவில௠கலரோட௠களம௠வரà¯à®µà®¤à¯ அரசியல௠ஜமà¯à®ªà®µà®¾à®©à¯à®•ளà¯à®•à¯à®•௠பà¯à®¤à¯ தெமà¯à®ªà¯ தரà¯à®®à¯‹.?
We need this type of persons