மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவதற்கு ஓர் எளிய யோசனை…!

எமர்ஜென்சி எனும் நெருக்கடிநிலைக் காலத்தில் இருந்து அரசியலில் பேசப்பட்டு வரும் தி.மு.க.,வின் செயல் தலைவராக உள்ள மு.க.ஸ்டாலின், எவ்வளவோ முயன்றும் மாநிலத்தின் முதல்வராக வர இயலாமல் தவிக்கிறார்.

எமர்ஜென்சி எனும் நெருக்கடிநிலைக் காலத்தில் இருந்து அரசியலில் பேசப்பட்டு வரும் தி.மு.க.,வின் செயல் தலைவராக உள்ள மு.க.ஸ்டாலின், எவ்வளவோ முயன்றும் மாநிலத்தின் முதல்வராக வர இயலாமல் தவிக்கிறார்.

89ஆம் வருடம் மு.கருணாநிதி முதல்வராக வந்தாலும், அல்ப நாட்களில் ஆட்சி இழக்க வேண்டியதாயிற்று. பின்னர் ஜெயலலிதா ஊழல்களைச் செய்து அவப்பெயர் பெற்ற போதும், ஜெயலலிதா வீட்டு ஜோடிச் செருப்புகளையும் அவர் செய்த வளர்ப்பு மகன் திருமணம், அப்போது அணிந்திருந்த தங்க நகைகள் பட்டுப் புடைவைகள் என குடும்ப தொலைக்காட்சியில் மீண்டும் மீண்டும் சாதனை ஒளிபரப்பாகக் காட்டி 96 தேர்தலில் திமுக., ஆட்சிக்கு வந்தது. ஆனாலும் அப்போது கருணாநிதி முதல்வர் ஆனார்.

தொடர்ந்து 2006ம் வருடம் அதே போன்ற தவறுகளால் ஜெயலலிதாவை பின்னுக்குத் தள்ளி கருணாநிதி மீண்டும் முதல்வர் அரியணை ஏறினார். இடைப்பட்ட காலத்தில் ஸ்டாலின் சென்னை நகர மேயர், துணை முதல்வர் என்றெல்லாம் பதவிகளை வகித்த போதும், தமிழக முதல்வர் கனவு மட்டும் நடக்கவே இல்லை. கடந்த 2016ம் வருட சட்டமன்றத் தேர்தலில் திமுக., வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது மு.க. ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்று கூறப்பட்டது. ஆனால் இடையில் ஏற்பட்ட குடும்பச் சண்டைகளில் கட்சி அல்லாடியது.

சென்னை, மதுரை என கட்சியின் அதிகாரம் தலை எடுக்க, அதனைக் களை எடுக்க வேண்டிய நிலையில் இருந்தார் கருணாநிதி. அவரிடம் அப்போது செய்தியாளர்கள் ஒரு கேள்வி கேட்டனர். ஸ்டாலின் முதல்வர் ஆவாரா என்று கேட்டபோது, தாமாக ஒரு கருத்தைச் சொன்னார் கருணாநிதி. எனக்கு இயற்கையாக ஏதாவது நேர்ந்தால் ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்றார்.

அப்போதும் வாய்ப்பு நழுவிப் போனது ஸ்டாலினுக்கு. ஆனால் தற்போது மு.கருணாநிதி செயல் இழந்தவராய், ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்தை நிரப்ப, செயல் தலைவர் ஆகியுள்ள ஸ்டாலினுக்கு வாய்ப்பு வரக்கூடும் என்று அரசியல் வட்டாரங்கள் கூறி வந்தன. ஆனால், அதுவும் நிறைவேறவில்லை.

இந்நிலையில், ஸ்டாலினுக்கு யோசனை கூறுவதாக, அதுவும் எளிய பரிகாரமாக மக்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்தக் கருத்து….

எம்.எல்.ஏ.,வே ஆகாத நாராயண சாமி முதல்வர் ஆயிட்டார்

மெஜாரிடியே இல்லாத பழனி சாமி முதல்வர் ஆயிட்டார்

38 எம்.எல்.ஏவை வெச்சிருக்கிற குமார சாமி முதல்வர் ஆவப்போறார்

ஆனா 40 வருசமா முயற்சி செய்தாலும் … ம்ஹும்… முடியல

அதுக்கு ஒரே ஒரு மாற்றம் செய்தாலே போதும்… அதுவும் பேர்ல…! ஆமா… இன்று முதல் உங்கள் பெயரை மு.க.ஸ்டாலின்சாமி என்று வைத்துக் கொண்டால் போதும்… முதல்வர் நாற்காலி தேடி ஓடி வரும்.

சாமி இல்ல சாமி இல்லன்னு சொல்லாதீங்கடான்னா.. கேக்குறீங்களா