ஶ்ரீரங்கம் கோவிலும் இரண்டு கலகங்களும்! ‘மரியாதை’ அளித்த விவகாரத்தில் ‘மரியாதை’ தவறியவர்கள்!

மத்திய அமைச்சரின் பேச்சு திக தலைவர் வீரமணி கூட  பேசாத (இரயில் முன்னே நிற்காமல் போனதால்...நடவடிக்கை) பிராமண துவேசமே!

திமுக… ஆட்சியில் இருந்த காலத்தே அன்றைய எதிர்க் கட்சித் தலைவியாக இருந்த ஜெயலலிதா ஶ்ரீரங்கம் கோவிலுக்கு வந்தார். அப்போது, ஸ்டாலினுக்கு இந்த முறை கொடுத்தது போல  மரியாதை கொடுத்த அதிகாரிகள் விடுமுறையில் சென்றனர்… (பயம்தான்) ..

இந்த முறை கோவில் வாசலில் உள்ளூர் தி.மு.கழக அன்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கோவில் பட்டர்கள் மரியாதை செய்தனர்.. அதிகாரிகள் தரப்பில் மவுனம்!

ஶ்ரீரங்கத்தில் உண்மை நிலவரம்… ஶ்ரீரங்கம் கோவில் விவகாரங்களில் திமுக., அதன் ஆட்சியாளர்கள் பல நேரங்களில் சாதகமாக நடந்து கொண்டது எனக்குத் தெரியும். இதற்கு முன்பாக நடந்த குடமுழுக்கு வைபோகத்தின் போது திமுக எப்படி நல்ல விதமாக நடந்து கொண்டனர்…. என்பதும் ஊருக்குத் தெரியும்.

தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து வரும் கழகங்களின் உள்ளூர் பிரமுகர்களை எதிர்த்து …. இங்கே சமூக வலை தளங்களில் கோவில் பட்டரை எதிர்த்து பொங்கல் வைப்பவர்கள், நாளை கோவிலில் மணி அடிக்கும் ஐயர்க்கு இதனால் பிரச்சனை என்றால்…

பார்ப்பான் கோவிலில் ஓசியில் உண்டு கொழுக்கிறான்… அடி வாங்கட்டும் என்று பெரியார் மண் வாடையோடு வீரம் பேசுவார்கள். ஶ்ரீரங்கம் கோவில் அர்ச்சகர்கள் விசயத்தில் விவரங்கள் அறியாமல், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பேசும் பாஜக அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பெரியார் சிலையை நீக்க நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவாரா?

சமுதாயத்தில் வலிமையில்லாத கோவில் அய்யர்… 60 ஆண்டுகள் தமிழகத்தில் கோலோச்சும் கழகத்தின் தலைமையை பகைத்து, அண்ணாமலை பல்கலைக்கழக உதயகுமார் போல சாகவேண்டும் என்கிற வெறி தெரிகிறது.

மு.க.ஸ்டாலினுக்கு மரியாதை அளித்த கோவில் அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு திக., தலைவர் வீரமணி கூட  பேசாத (இரயில் முன்னே நிற்காமல் போனதால்…நடவடிக்கை) பிராமண துவேசமே!

– விஜயராகவன் கிருஷ்ணன்