உயிர் எங்கே..? பிரமிக்க வைக்கும் கண்டுபிடிப்பு

 

 
நம் காதல் காவியங்களில் எல்லாம் காதலன் காதலியிடம் நீதான் என் உயிர் என்பான். மாயஜால கதைகளில் ஏழு கடல், ஏழு மலை கடந்து தனது உயிரை கூண்டில் இருக்கும் கிளியின் உடலில் அரக்கன் வைத்திருப்பான்.

உண்மையில் உயிர் அத்தனை எளிதானதா? நினைத்த இடத்தில் நினைத்த மாதிரி வைத்துகொள்ள முடியுமா?

உயிர் என்பது மற்றவர்கள் வைத்துக்கொள்ளும் பொருள் அல்ல. உயிர் தொட்டுப்பார்க்க கூடிய விஷயமும் அல்ல என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அந்த உயிர் நம் உடலில் எங்கிருக்கிறது? மற்ற உயிரினங்களிடம் எங்கிருக்கிறது? என்பது சிதம்பர ரகசியம் போல் விஞ்ஞானத்துக்கு போக்கு காட்டிக் கொண்டிருந்தது.

சுவாசிப்பதும், இதயத் துடிப்பும்தான் உயிர் என்றால் அது தவறு. அவைகளெல்லாம் வெறும் செயல்பாடுகள் தானே தவிர உயிர் இல்லை. இதயமும் நுரையீரலும் கூட சுற்றும் பம்பரம் போல்தான். சுற்ற வைப்பது எது? இதுதான் உயிர் என்று யாரும் கண்டு சொல்லவில்லை.

இதயமும் நுரையீரலும் தான் உயிர் என்றல் கனடா நாட்டில் 230 பாரன்ஹீட் வெப்பத்தில் வென்னீர் ஊற்றுகளில் வாழும் பாக்டீரியாக்களுக்கு இதயம், நுரையீரல், சிறுநீரகம் என்று எதுவும் இல்லை என சூடம் அணைத்து சத்தியம் செய்கிறார்கள்.

உயிர் இந்த இடத்தில்தான் இருக்கிறது என்று சொல்லக்கூடிய பொருள் இல்லை. எனவேதான் அறிவியல் அது எங்கிருக்கிறது என்று துருவித்துருவி தேடத் தொடங்கியது. கடைசியாக உயிரின் ரகசியத்தை கண்டுபிடித்துவிட்டார்கள்.

இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய கண்டுபிடிப்பு இதுதான். உயிர் என்பது நமது உடலில் இருக்கும் செல்களில்தான் ஒளிந்திருக்கிறது. உடலில் மொத்தம் 10 கோடி செல்கள் இருக்கின்றன. ஒவ்வொரு செல்லின் மையத்தில் இருக்கும் உட்கரு என்கிற நீயூக்ளியசில் 23 ஜோடி குரோமோசோம்கள் உள்ளன.

இந்த குரோமோசோம்களில் டி.என்.ஏ. என்று சொல்லக்கூடிய ஆக்ஸ்ரிபோ நீயூக்ளிக் அமிலம் என்ற ஏணி வடிவ பொருள் உள்ளது. இந்த டி.என்.ஏ.-வை விரித்தால் 5 அடி நீளம் நீளும். இதுதான் நமது உயிரின் ஆதாரம். இதில்தான் ஜீன்கள் உள்ளன.

ஜீன்கள்தான் நாம் கருவாக உருவாகும்போது நமது பெற்றோர்களின் உடல் அமைப்பு, குணங்கள், பரம்பரை நோய்கள் ஆகியவற்றை கொண்டு வந்து நம்மிடம் சேர்கின்றன. நமது உயிரின் ரகசியமே ஜீன்களில்தான் உள்ளது என்பதை அறிவியல் கண்டுபிடித்துவிட்டது.

‘கியூமன் ஜீனோம்’ என்ற விதிப்படி மனிதன் மற்றும் ஜீவராசிகளின் ஜீன்களில் உள்ளே என்ன பதியப்பட்டிருக்கிறது என்பதை தனித்தனி வகையாகப் பிரித்து தேடிக் கொண்டிருக்கிறது விஞ்ஞானம்.

இன்னும் 50 ஆண்டுகளில் ஜீன்கள் பற்றிய விவரம் முழுவதும் மனிதன் கைக்கு வந்துவிடும். அப்போது உயிரை செயற்கையாகக் கூட உருவாக்கிவிடுவான்.

எனவே நமது உயிர் நமது செல்களில் உள்ள ஜீன்களில்தான் இருக்கிறது. கடந்த ஆயிரம் ஆண்டில் மிகப்பெரிய கண்டுபிடிப்பு இதுதான்.

அதனால் சிகரெட், மது போன்ற செல்களை பாழ்படுத்தும் பழக்கங்களை
விட்டொளிப்பதுதான் நம் உயிருக்கு நாம் செய்யும் மரியாதை..!

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.