கற்பனைல பிட்டு போடுறதுக்கும் ஒரு லிமிட் இருக்கு… செந்தமிழை மறந்த சீமான் அண்ணே…!

வன்முறையைத் தூண்டி கத்துவதால் குண்டர் தடுப்புச் சட்டத்திலும், தேச பிரிவினை வாதத்தைத் தூண்டி குரைப்பதால் தேசவிரோத வழக்கிலும் கைது செய்யப்பட வேண்டிய சைமன் செபஸ்டியான் கவனத்திற்கு,

படகில் போனேன் என்றதோடு நிறுத்தியிருக்கலாம், ஆனால் உன் கற்பனை நீண்டதால் “ஆமை ஓடு, சிங்களன் பட்டாசு சுட்டான், வானம் வானவில் வரவேற்பு போட்டது” என நீ போட்ட extra பிட்டு…,

“புலிகள் எனக்கு விருந்து வைத்தாங்க” என நிறுத்தியிருக்கலாம், ஆனால் உன் கற்பனை நீண்டதால் “28 கிலோ ஆமை கறி, ஆறுவகை ஏறால், ஆறுவகை நண்டு” என நீ போட்ட extra பிட்டு…,

“அண்ணனுடன் விருந்து உண்டேன்” என நிறுத்தியிருக்கலாம், ஆனால் உன் கற்பனை நீண்டதால் “அண்ணனுக்கும் எனக்கும் சாப்பாடு போட்டி நடந்தது” என நீ போட்ட extra பிட்டு…,

“அண்ணன் எனக்கு துப்பாக்கி சுட பழக்கினார்” என நிறுத்தியிருக்கலாம், ஆனால் உன் கற்பனை நீண்டதால் “முதலில் கைத்துப்பாக்கி எனவும், பிறகு AK74” எனவும் நீ மாற்றி மாற்றி போட்ட extra பிட்டு…,

“AK74 சுட்டு பழகினேன்” என நிறுத்தியிருக்கலாம், ஆனால் உன் கற்பனை நீண்டதால் “இந்தியாவிலேயே நீ தான் AK74 சுட்டு பழகிய ஒரே ஆளு, இதை போய் இந்தியாவிலே சொல்லு” என தலைவரே சொன்னார் என நீ போட்ட extra பிட்டு..

“அண்ணன் என்னை பார்த்து பேச தயங்கினார்” என நிறுத்தியிருக்கலாம், ஆனால் உன் கற்பனை நீண்டதால் “ஆங்கிலத்தில் பேசினால் தம்பி திட்டுவான் என பிரபாகரன் பயந்து தயங்கி நின்றார்” என நீ போட்ட extra பிட்டு…,

“என்னை தங்க வைத்ததால் இருவரை சுட்டு கொன்றனர்” என நிறுத்தியிருக்கலாம், ஆனால் உன் கற்பனை நீண்டதால் “முதலில் யாழ்ப்பாண மாணவர்கள்
எனவும் பிறகு எனக்காக அண்ணன் தவம் சுட்டு கொல்லப்பட்டார்” எனவும் நீ மாற்றி மாற்றி போட்ட extra பிட்டு…,

“அரிசி கப்பல்” என நிறுத்தியிருக்கலாம், ஆனால் உன் கற்பனை நீண்டதால் “40,000 டன் ஆஸ்திரேலிய அரிசி கப்பல்” என நீ போட்ட extra பிட்டு…,

“அங்கே தான் சுட்டு பழகினோம்” என நிறுத்தியிருக்கலாம், ஆனால் உன் கற்பனை நீண்டதால் “தலைவர் அந்த கப்பலை எனக்கு சுட்டு பழக கொடுத்தார்” என நீ போட்ட extra பிட்டு…,

“அனைவரையும் அரசியலில் வீழ்த்துவேன்” என நிறுத்தியிருக்கலாம், ஆனால் உன் கற்பனை நீண்டதால் “அனைவரையும் வெட்டுவேன், குத்துவேன், கொல்லுவேன், உயிரோடு வைச்சு கொளுத்துவேன்” என நீ போட்ட extra பிட்டு…,

இப்படி நீ கற்பனை வளத்துடன் போட்ட எண்ணற்ற பிட்டுகளால்.., முறுக்கேறி போன தம்பிகள் “அடி வெட்டு குத்து, உதை, என வன்முறை தான் அனைத்திற்க்கும் வழி என்கிற வன்ம நிலைக்கு இன்று வந்திருக்கின்றனர்.

நிஜத்தில் சைமன் செபஸ்டியான் ஒரு விசயத்தை புரிந்து கொள்ள வேண்டும். “உன்னை அடித்து உன் வாயை உடைத்து விடுவேன்” என எவரையாவது பார்த்து சீமான் மிக சுலபமாக, உணர்ச்சி தெறிக்க, நரம்பு முறுக்கி கொண்டு சொல்லலாம். ஆனால், அடுத்தவர் வாயை உடைக்க உன் கைகள் நீளும் வேளையில் அவனின் கைகள் பூ பறித்து கொண்டிருக்காது” என்பதை சைமன் செபஸ்டியான் உணர வேண்டும். காரணம், நீ கையில் எடுக்க விரும்பும் வன்முறையின் இருபக்கமும் கூரானவை!!!

அதனால் சைமன் செபஸ்டியான் .., தன் தம்பிகளை மாற்ற வேண்டுமெனில், முதலில் சைமன் செபஸ்டியான் தன்னை மாற்றி கொள்ள வேண்டும்…,!!! கேட்டால், “நான் கிராமத்தான், இயல்பானவன், நான் சினம் கொண்ட இனத்தவன், வாளோடும் வேலோடும் பிறந்தவன்” என கதைகளை சொல்ல வேண்டாம்…., காரணம், இது சைமன் செபஸ்டியானுக்கு மட்டுமல்ல, இங்கே அனைவருக்குமே இந்த வரலாறும் கெத்தும் துணிச்சலும் உண்டு.

இங்கே சைமன் செபஸ்டியான் குத்தினால் தான் மட்டும் ரத்தம் வரும் என்றில்லை…,
பவர் ஸ்டார் குத்தினாலும் ரத்தம் வரும்,
பாரிசாலனை குத்தினாலும் ரத்தம் வரும்!!!

ஆதலால்…, “கத்தியை தீட்டாதே தம்பி புத்தியை தீட்டு”
என்ற பொன்மொழியை நினைவுறுத்தி, தம்பி சைமன் செபஸ்டியான் அவர்களே, “முதலில் நீங்கள் மாறுங்கள்.., மாற்றம் உங்களிலிருந்து தொடங்கட்டும்”…!!!!!

பின்குறிப்பு: வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வரும் கருத்து…

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.