சிக்கிம் – கஞ்சன் ஜங்கா

 

 

வைரச் சிகரம்

உலகின் மூன்றாவது மிக உயர்ந்த சிகரமான கஞ்சன் ஜங்காவை வைரச் சிகரம் என்றுதான் அழைக்கிறார்கள். பனி மூடிய இந்த சிகரத்தில் பட்டுத் தெறிக்கும் சூரியக் கதிர்களால் ஏற்படும் ஜொலிப்பு வைரம் மின்னுவது போலவே இருக்கும் என்கிறார்கள். அந்த சிகரத்தை சிக்கிம் மாநிலத்திலிருந்து பார்க்கலாம். கஞ்சன் ஜங்கா சிகரத்தில் ஏறி சாகஸம் புரிபவர்களும் சிக்கிம் வழியாகத் தான் மேலே ஏற முடியும்.

மலையேறுபவர்களுக்காக கோச்சாலா என்ற பகுதியை அரசு திறந்து விட்டிருக்கிறது. இதனால் இந்தியப் பகுதியில் இருந்து கஞ்சன் ஜங்கா சிகரம் ஏறுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக கூடியுள்ளது.

கஞ்சன் ஜங்காதான் உலகின் அழகான சிகரம் என்று பெயர் பெற்றது. காலையில் சூரியன் உதிக்கும் போது சிகரத்தின் உச்சியில் மட்டுமே சூரிய ஒளி படும்போது கீழே இருக்கம் இடங்கள் எல்லாம் மறைந்து விடும். சிகரம் அந்தரத்தில் தொங்குவது போல் காட்சியளிப்பது வாழ்நாளில் காணக்கிடைக்காத அற்புதக் காட்சி.

அருகில் உள்ள ரயில் நிலையம் நியூ ஜல்பைகுரி, (221 கி.மீ.) சிலிகுரி (137 கி.மீ.), அருகில் இருக்கும் நகரம் சிக்கிம் தலைநகர் காங்டாக். ஏப்ரல், மே மாதங்கள் சீஸன் காலமாகும்.

காங்டாக் நகரில் உள்ள ஹோட்டல் சகோரிகா (03592 206958) தங்குவதற்கு ஏற்ற 2 ஸ்டார் ஹோட்டல். இருவர் ஓர் இரவு தங்க கட்டணம் ரூ.1,926.
===

படங்கள் : கூகுள் இமேஜ்