
தமிழ் அகராதி: பரிவார் – இது RSS ஸின் கிளை அமைப்புகளை மட்டுமே குறிக்கும்.
குடும்பம், சகோதர, தோழமை என்று அர்த்தம் கொள்ளக் கூடாது
scooter mechanic: என்றால் டாக்டர் அப்துல் கலாமை மட்டுமே குறிக்கும்
Accused: என்றால் குற்றாவாளி என்றே பொருள் கொள்க
orthodox : ஆத்திரம். அதிக கோவம், ரௌத்திரம் என பொருள் கொள்க
Secular: மூஸ்லீம், கிறுதுவார்களுக்கு முழு ஆதரவு கொடுப்பதும் இந்துமதத்தை வெறுப்பதும் secular ஆகும்
Hindutva: இந்து பயங்கரவாதத்தை குறிக்கும்
Saffron: காவி பயங்கரவாதத்தை குறிக்கும்
இப்படி ஒரு கருத்து சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதற்கான பின்னணி என்ன?
நேற்று கர்நாடக மாநிலத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர், தனது ராணுவத் துறை சார்ந்த நபர்களைக் குறிப்பிடும் போது, பரிவார் என்ற சொல்லைப் பயன்படூத்தினார். ஆனால், அதை ஆர்.எஸ்.எஸ்., என்று அர்த்தம் கொண்டு, அமைச்சர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரைப் பார்வையிட்டு விட்டு பின்னர் வருகிறார் என்று ஊடகத்திலும் அரசியல்வாதிகள் மத்தியிலும் செய்தி பரப்பப் பட்டது. ஆனால் அவர் கூறியதோ, முன்னாள் படை வீரர் ஒருவரைக் குறித்து!
ஆக… பரிவார் என்றால் ஆர்.எஸ்.எஸ்., குடும்பம்தான் போல…!
அவர் சொன்னது என்ன? உண்மை இதோ : கர்நாடக மாநிலம் குடகு பகுதியில்.. முன்பே திட்டமிட்டபடி நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்த போது.. வெள்ளத்தால் கடுமையான பாதிப்புக்கு ஆளான முன்னாள் இராணுவ வீரர்களிடம் அவர்களது குறைகளைக் கேட்டு உரையாடத் துவங்கியதும்..
அந்த மாவட்டத்துக்கு பொறுப்பாளராக இருந்த மாநில அமைச்சர் போதும் கூட்டத்தை முடித்துக் கொள்ளுங்கள்.. இது விசயமாக (மாநில) அதிகாரிகளுடன் முதலில் கூட்டம் நடத்தலாம் என ஆட்சேபம் தெரிவித்தார்..
ஆனால் நிர்மலா சீதாராமன் இது ஏற்கனவே ஒவ்வொரு நிமிடமும் திட்மிட்டபடி நடக்கும் நிகழ்வு.. உங்களுக்கு உங்கள் அதிகாரிகள் கூட்டம் முக்கியமென்றால் எனக்கு என் குடும்பம் முக்கியம்..என சொன்னார்.
அவர் முன்னாள் இராணுவ வீரர்களைத்தான் குடும்பம் என இந்தியில் பரிவார் என குறிப்பிட்டார்.. ஆனால் ஊடக பயங்கரவாத கும்பல்ஸ் சங் பரிவார் தான் எனக்கு முக்கியம் என நிர்மலா சீதாராமன் கூறியதாக விஷமத்தனமாக பொய்யாக செய்தி சொல்வது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது!